[X] Close

கோச்சடையான் பட விவகாரம்: லதா ரஜினிகாந்த் ஆஜராக பெங்களூரு போலீஸ் உத்தரவு


  • kamadenu
  • Posted: 14 May, 2019 08:06 am
  • அ+ அ-

-இரா.வினோத்

‘கோச்சடையான்’ திரைப்பட விவகாரம் தொடர்பான விசார ணைக்கு ஆஜராகுமாறு நடிகர் ரஜினிகாந்த் மனைவி லதாவுக்கு பெங்களூரு போலீஸார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

நடிகர் ரஜினிகாந்த் நடித்த ‘கோச்சடையான்’ திரைப்படம் கடந்த 2014-ல் வெளியானது. இதை ரஜினி மகள் சவுந்தர்யா அனிமேஷன் முறையில்இயக்கினார். இந்த திரைப்படத்தின் வெளியீடு மற்றும் விநியோக உரிமம் பெங்களூருவைச் சேர்ந்த ஆட் பீரோ அட்வர்டைசிங் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. இதற்காக லதா ரஜினிகாந்த் அந்த நிறுவனத்திடம் இருந்து ரூ.14.9 கோடி கடன் பெற்றார்.ஆனால் விநியோக உரிமையை வேறு  நிறுவனத்துக்கு வழங்கியுள்ளார்.

இதையடுத்து ரூ.14.9 கோடி பணத்தை திருப்பித் தருமாறு ஆட் பீரோ அட்வர்டைசிங் நிறுவனம் லதாவிடம் கேட்டுள்ளது. அதில் ரூ.8.7 கோடியை செலுத்திய லதா, ரூ.6.2 கோடிக்கு சில ஆவணங்களை வழங்கியுள்ளார்.

இதை ஏற்க மறுத்த ஆட் பீரோ அட்வர்டைசிங் நிறுவனம் பெங்களூரு மாநகர அமர்வு நீதிமன்றத்தில் லதா ரஜினிகாந்த் மீது 2015-ல் வழக்கு தொடுத்தது. ஒப்பந்தத்தை மீறி வேறு நிறுவனத்துக்கு விநியோக உரிமையை வழங்கியதுடன் கடனை திருப்பி தராமல் ஏமாற்றி வரும் லதா மீது நடவடிக்கை எடுக்குமாறு அதில் கோரப்பட்டிருந்தது.

நீதிமன்றத்தில் முறையீடு

வழக்கு பதிவு செய்து விசாரிக்குமாறு பெங்களூரு அல்சூர் கேட் காவல் நிலைய போலீஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்துலதா ரஜினிகாந்த் கர்நாடகஉயர் நீதிமன்றத்தில் முறையிட்டார். அதை ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்றம், அந்த வழக்கை ரத்து செய்தது.

இதை எதிர்த்து ஆட் பீரோ அட்வர்டைசிங் நிறுவனம் கடந்த 2018-ல் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டது. அதை விசாரித்த உச்ச நீதிமன்றம், இவ்வழக்கை அல்சூர் கேட் போலீஸார்விசாரிக்க உத்தரவிட்டது. அத்துடன் ரூ.6.2 கோடியை வழங்குமாறு லதாவுக்கு உத்தர விட்டது.

ஆஜராக அவகாசம்

அல்சூர் கேட் போலீஸார் லதா ரஜினிகாந்திடம் கடந்த அக்டோபர் 10-ம் தேதிவிசாரணை நடத்தினர். அடுத்தகட்ட விசாரணைக்கு மே 6-ம் தேதி ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பினர். ஆனால், வெளியூர் பயணத்தில் இருப்பதால் மே 20-ம் தேதிக்கு பிறகு நேரில் ஆஜராக லதா ரஜினி சார்பில் அவகாசம் கோரப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட போலீஸார்,வரும் 20-ம் தேதிக்குப் பிறகுவிசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு லதா ரஜினிகாந்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close