[X] Close

அபிநந்தனுக்கு சூரத்காரில் பணி


  • kamadenu
  • Posted: 14 May, 2019 07:59 am
  • அ+ அ-

கடந்த பிப்ரவரி மாதம் காஷ்மீரின் புல்வாமா பகுதியில் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பினர் தாக்குதல் நடத்தி யதில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்தனர்.

இதையடுத்து, பாகிஸ் தானின் பாலகோட் பகுதி யில் உள்ள அந்த தீவிரவாத அமைப்பின் பயிற்சி முகாம்கள் மீது இந்திய விமானப் படை விமானங்கள் வான்வழி தாக்குதல் நடத்தின.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தான் போர் விமானங்கள் இந்திய வான் எல்லைக்குள் அத்துமீறி நுழைய முயன்றன. அவற்றை நமது விமானப்படைக்கு சொந்தமான மிக்-21 பைசன் ரக விமானங்கள் விரட்டிச் சென்றன. இதில் விங் கமாண்டர் அபிநந்தன் ஓட்டிச் சென்ற விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதுடன் அவரை, பாகிஸ்தான் ராணுவம் சிறைபிடித்தது.

எனினும், இந்திய அரசின் ராஜ தந்திர முயற்சியால், அபிநந்தன் 60 மணி நேரத்துக்குப் பிறகு விடுவிக்கப்பட்டார். இதையடுத்து, அவருக்கு மருத்துவ பரி சோதனை செய்யப்பட்டு ஓய்வு கொடுக்கப்பட்டது.

மேலும் காஷ்மீர் பகுதி யில் பணிபுரிந்து வந்த அபிநந்தன் பாதுகாப்பு காரணங்களுக்காக அங்கிருந்து விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில், அபிநந்தன் ராஜஸ்தான் மாநிலம் சூரத்கார் விமானப்படை தளத்தில் பணி யமர்த்தப்பட்டு, 11-ம் தேதியே அவர் பணியில் சேர்ந்துவிட்டார். அபிநந்தனுக்கு ராஜஸ்தான் ஒன்றும் புதிதல்ல. அவர் பைக்கா னெரில் ஏற்கெனவே பணியாற்றி உள்ளார். மேலும் விமானப்படை முன்னாள் வீரரின் மகனான அபிநந்தன், தனது தந்தை ராஜஸ் தானில் பணிபுரிந்தபோது அங்குதான் படித்தார் என்பது குறிப் பிடத்தக்கது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close