[X] Close

மோடி எந்தப் பணியும் செய்யவில்லை: பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு


  • kamadenu
  • Posted: 14 May, 2019 07:52 am
  • அ+ அ-

-பி.டி.ஐ

மத்திய பிரதேச மாநிலம் ரத்லம் நகரில் காங்கிரஸ் சார்பில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பேசியதாவது:

தேர்தல் பிரச்சாரத்தின்போது அரசியல் கட்சித் தலைவர்கள் பொதுவாக உண்மையான பிரச்சினைகள் குறித்துதான் பேச வேண்டும். குறிப்பாக, பொதுமக்களின் பிரச்சினைகள் என்ன, அவற்றுக்கு தீர்வு காண என்ன நடவடிக்கை எடுக்கப்படும், வெற்றி பெற்றால் அடுத்த 5 ஆண்டுகளில் என்ன செய்வோம், கடந்த 5 ஆண்டில் என்ன செய்தோம் என்பவை குறித்துதான் பேச வேண்டும். ஆனால், பிரதமர் மோடி எதை எதையோ பேசுகிறாரே தவிர, பாஜகவின் நிறைவேற்றப்படாத வாக்குறுதி குறித்து பேசுவதில்லை.

பிரதமர் மோடி தனது வாரணாசி தொகுதியில் உள்ள ஏழைகள், விவசாயிகளின் பிரச்சினையை தீர்க்க 5 நிமிடங்களைக்கூட செலவிடவில்லை. கடந்த 5 ஆண்டுகளாக அவர் பிரச்சாரம் மட்டும்தான் செய்தார். எந்த ஒரு பணியையும் செய்யவில்லை. பிரச்சாரத்தின்போது மட்டும்தான் பொதுமக்களை சந்திக்கிறார். எனவே, உங்களுடைய பலத்தை புரிந்துகொள்ளுங்கள். உங்கள் வாக்கு முக்கியமானது. அதை வீணாக்காதீர்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சமீபத்தில் முன்னணி ஆங்கில நாளிதழுக்கு பிரதமர் மோடி அளித்த பேட்டியில், “என்னுடைய புகழ் வளர்ந்ததற்கு டெல்லியில் உள்ள கான் சந்தை குழு காரணமல்ல. 45 ஆண்டு கால கடுமையான உழைப்புதான் காரணம்” என கூறியிருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பிரியங்கா பேசியுள்ளார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close