[X] Close

‘கமல்ஹாசனுக்கு வித்தியாசம் தெரியவில்லை'- நிர்மலா சீதாராமன்


  • kamadenu
  • Posted: 14 May, 2019 07:10 am
  • அ+ அ-

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லியில் நேற்று நிருபர்களிடம் கூறியபோது, "கொலைகாரனுக்கும் தீவிரவாதிக்கும் இடையேயான வித்தியாசம் கமல்ஹாசனுக்கு புரியவில்லை. மகாத்மா காந்தியின் படுகொலை வழக்கு விசாரணையை அவர் முழுமையாகப் படித்தால் அந்த வித்தியாசத்தைப் புரிந்து கொள்ள முடியும். சிறுபான்மையினரை கவர்வதற்காகவே இவ்வாறு பேசியுள்ளார்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறியபோது, ‘‘கமல் கூறியபடி கோட்சே தீவிரவாதி இல்லை, தேசத்தையும் மக்களையும் அச்சுறுத்துபவர் தீவிரவாதி. கோட்சே, மகாத்மா காந்தியை கொலை செய்த கொலையாளி. ஐ.நா. வரையறைபடி அவர் தீவிரவாதி கிடையாது. இந்து மக்களை இழிவுபடுத்தும் வகையில் கமல்ஹாசன் பேசி வருகிறார். அவரது கட்சிக்கு தடை விதிக்க வேண்டும்’’ என்றார்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close