[X] Close

வாக்கு எண்ணிக்கையில் கவனம் செலுத்த முடிவு; 21-ல் நடைபெற இருந்த எதிர்க்கட்சிகள் கூட்டம் ரத்து: தேர்தல் முடிவுக்குப் பிறகு ஆலோசனை


21

  • kamadenu
  • Posted: 14 May, 2019 07:02 am
  • அ+ அ-

வாக்கு எண்ணிக்கையில் கவனம் செலுத்த வேண்டும் என்ற மம்தா பானர்ஜியின் யோசனை காரணமாக, வரும் 21-ம் தேதி நடைபெற இருந்த எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தேர்தல் முடிவுக்குப் பிறகு இந்தக் கூட்டத்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

நாடாளுமன்ற மக்களவையில் உள்ள 543 இடங்களுக்கு ஏப்ரல் 11 முதல் மே 19 வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. இதுவரை 6 கட்ட தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. 7-வது மற்றும் இறுதிகட்ட தேர்தல் வரும் 19-ம் தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை 23-ம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்காவிட்டாலும், பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சி யைப் பிடிக்கும் என பெரும் பாலான தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகள் தெரிவித்துள் ளன. அதேநேரம், பாஜக கூட்டணி ஆட்சிக்கு வருவதைத் தடுக்க காங் கிரஸ், தெலுங்கு தேசம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

இந்த சூழ்நிலையில், ஆந்திர முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திபாபு நாயுடு கடந்த வாரம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை டெல்லியில் சந்தித்துப் பேசினார். அப்போது, தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி அமைப்பது குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து விரிவாக ஆலோசிப் பதற்காக, தேர்தல் முடிவு வெளியா வதற்கு 2 நாள் முன்னதாக, வரும் 21-ம் தேதி எதிர்க்கட்சித் தலைவர் கள் கூட்டத்தைக் கூட்டுவது குறித் தும் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியானது. இது தொடர்பாக மேற்குவங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி யையும் நாயுடு நேரில் சந்தித்துப் பேசினார். இதுபோல மற்ற தலைவர்களையும் சந்திக்க திட்டமிட்டிருந்தார்.

ஆனால், தேர்தல் முடிவு வெளியான பிறகு இதுபோன்ற கூட்டத்தை நடத்தலாம் என நாயுடுவிடம் மம்தா எடுத்துக் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது. 21-ம் தேதி கூட்டம் நடத்துவதற்கு பதில், 23-ம் தேதி நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக் கையில் கவனம் செலுத்த வேண்டி யது அவசியம் என நாயுடுவிடம் மம்தா கூறியதாகத் தெரிகிறது. குறிப்பாக, வாக்கு எண்ணிக்கை நடைபெறும்போது எவ்வாறு விழிப்புடன் இருக்க வேண்டும் என் பது குறித்து, முறையான பயிற்சி அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.

இதுபோல, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி உள்ளிட்டோரும் தேர்தல் முடிவுக்கு முன்பு கூடி பேசுவதில் அர்த்தமில்லை என கருதுவதாக தகவல் வெளியாகி உள்ளது. எனவே, வரும் 21-ம் தேதி எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெற வாய்ப்பு இல்லை எனக் கூறப்படுகிறது. தேர்தல் முடிவுக்குப் பிறகே கூட்டம் நடைபெறும் எனத் தெரிகிறது.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close