[X] Close

மகாகாளேஷ்வர் கோயிலில் பிரியங்கா காந்தி வழிபாடு


  • kamadenu
  • Posted: 13 May, 2019 17:29 pm
  • அ+ அ-

உஜ்ஜைனில் உள்ள மகாகாளேஷ்வர் கோயிலில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வழிபாடு நடத்தினார். ம.பி முதல்வர் கமல்நாத்துடன் உடன் சென்றார்.

மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் உள்ளிட்ட இடங்களில் தேர்தல் பிரச்சாரம் செய்வதற்காக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி இன்று சென்றார். முன்னதாக உஜ்ஜைன் நகரில் உள்ள பிரசித்தி பெற்ற மகாகாளேஷ்வர் கோயிலுக்கு அவர் சென்றார்.

மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத்தும் உடன் சென்றார். மகாகாளேஷ்வர் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடத்தினார். அவருடன் கமல்நாத்தும் பூஜைகள் செய்து வழிபட்டார்.

pri3.JPG 

பிரியங்கா காந்தி வழிபாடு நடத்துவதற்காக கோயிலில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. பின்னர் அவர்கள் இருவரும் அங்கிருந்து பிரச்சாரம் செய்ய இந்தூர் புறப்பட்டுச் சென்றனர்.

ujain.JPG 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close