[X] Close

ரூ.1,875 கோடி வங்கிக் கடன் முறைகேடு: சாந்தா கோச்சார் கணவருடன் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜர்


1-875

  • kamadenu
  • Posted: 13 May, 2019 11:50 am
  • அ+ அ-

1,875 கோடி ரூபாய் முறைகேடாக வங்கிக் கடன் வழங்கி புகார் தொடர்பாக, ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி சந்தா கோச்சார் மற்றும் அவரது கணவர் தீபக் கோச்சார் ஆகியோர் அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று மீண்டும் ஆஜராகினர்.  

விடியோகான் நிறுவனத்துக்கு கடன் வழங்கியதில் முறைகேடாக நடந்துகொண்டதாக ஐசிஐசிஐ வங்கி முன்னாள் தலைமை செயல் அதிகாரி சந்தா கோச்சார் மீது அரவிந்த் குப்தா என்பவர் 2017-ம் ஆண்டில் குற்றம்சாட்டினார்.

அவர் மீதான குற்றச்சாட்டை விசாரித்த முன்னாள் நீதிபதி பி என் ஸ்ரீகிருஷ்ணா குழுவின் அறிக்கையில், சந்தா கோச்சார் வங்கி விதிமுறைகளை மீறியது உண்மைதான் என கூறியது. இதையடுத்து ஐசிஐசிஐ வங்கி இயக்குநர் குழு, சந்தா கோச்சாரின் அளித்த ராஜினாமவை, நிரந்தரப் அவரை பணியில் இருந்து நீக்கியது.

சாந்தா கோச்சார் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. அமலாக்கத்துறையும் விசாரணை நடத்தி வந்தது. இந்தநிலையில், சாந்தா கோச்சார் மற்றும் வீடியோகான் நிறுவனத் தலைவர் வேணுகோபால் தூத் ஆகியோர் வீடுகளில் அமலாக்கத் துறை அதிகாரிகள் மார்ச் மாதம் சோதனை நடத்தினர்.

இந்த சோதனை நடவடிக்கையானது மும்பையில் உள்ள வீடியோ கான் நிறுவனத்தின் 5 அலுவலகங்கள் மற்றும் வேணுகோபால் தூத் வீட்டிலும் ஒருசேர நடத்தப் பட்டது.அமலாக்கத்துறை அதிகாரிகள் உள்ளூர் போலீசாரின் உதவியோடு இந்த சோதனையை நடத்தினர். இதைத்தொடர்ந்து சாந்தா கோச்சாரை அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்ற அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இதில் சாந்தா கோச்சார் மற்றும் அவரது கணவரின் முதலீடுகள், சொத்துகள் உள்ளிட்ட விவரங்களை கேட்டதாகவும், மேலும் ஆவணங்களை கேட்டு பெற்றனர்.

இந்தநிலையில் சாந்தா கோச்சார் இன்று மீண்டும் டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார்.  அவரிடம் வங்கிக்கடன் முறைகேடு தொடர்பாக பல்வேறு கேள்விகளை அதிகாரிகள் கேட்டதாக தெரிகிறது. அதுபோலவே அமலாக்கதுறை திரட்டிய ஆவணங்களை வைத்து அதுதொடர்பான விளக்கங்களையும் கேட்டனர்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close