[X] Close

வாக்களிக்காத திக் விஜய் சிங்; கிண்டல் செய்த பாஜக


  • kamadenu
  • Posted: 13 May, 2019 11:10 am
  • அ+ அ-

போபால் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங் நேற்று வாக்களிக்காத நிலையில் அவரை பாஜக கிண்டல் செய்துள்ளது.

மத்திய பிரதேச மாநிலம், போபால் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் முன்னாள் முதல்வர் திக்விஜய் சிங்கும், அவரை எதிர்த்து பாஜக சார்பில் பிரக்யா சிங் தாக்கூரும் போட்டியிடுகின்றனர். இருவருக்கும் இடையே கடும போட்டி ஏற்பட்டது. இந்த தொகுதியில் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

போபாலில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்ததால் வழக்கத்தை விடவும் 8 சதவீத அளவுக்கு கூடுதலாக வாக்குப்பதிவு அமைந்ததாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. போபால் தொகுதி காங்கிரஸ் வேட்பாளரான திக் விஜய் சிங் நேற்று வாக்களிக்கவில்லை. அவருக்கு ராஜ்கர் தொகுதியில் வாக்குள்ளது.

தனது தொகுதியில் வாக்குப்பதிவை கண்காணிப்பதற்காக அவர் நாள் முழுவதும் போபாலிலேயே இருந்தார் திக்விஜய் சிங். இதற்கு அவர் வருத்தம் தெரிவித்தார். ஆனால் அவரை பாஜக கிண்டல் செய்துள்ளது.

இதுகுறித்து பாஜக செய்தித்தொடர்பாளர் அமித் மாலிவி கூறுகையில் ‘‘மத்திய பிரதேசத்தில் 2 முறை முதல்வராக இருந்த திக் விஜய் சிங், போபால் தொகுதியில் தோற்பது உறுதி. அதுவும் பல லடசம் வாக்குகள் வித்தியாசத்தில் அவர் தோற்பார். அவருக்கு ஏற்பட்டுள்ள பயமே இதனை உறுதி செய்கிறது. இந்த பயத்தால் தான் அவர் நேற்று வாக்களிக்க கூட செல்லவில்லை’’ எனக் கூறியுள்ளார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close