[X] Close

அமித் ஷா கூட்டத்துக்கு திடீர் அனுமதி மறுப்பு: மேற்குவங்கத்தில் பரபரப்பு


  • kamadenu
  • Posted: 13 May, 2019 10:55 am
  • அ+ அ-

மக்களவைத் தேர்தல் ஏப்ரல் மாதம் 11-ம் தேதி தொடங்கி 7- கட்டங்களாக நடைபெற்று வருகறது. ஏற்கெனவே ஆறு கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் இறுதிகட்ட தேர்தல் மே 19-ம் தேதி நடைபெறுகிறது. இதில் மேற்குவங்க மாநிலத்திலும் சில தொகுதிகளில் இறுதிகட்டத் தேர்தல் நடைபெறுகிறது.

இந்நிலையில், இறுதிக்கட்ட பிரசாரத்துக்காக ஜாதவ்பூர் பகுதியில் பாஜக தலைவர் அமித் ஷா  பங்கேற்கும் பிரமாண்டமான பொதுக்கூட்டத்தை நடத்த பாஜக திட்டமிட்டு பணியாற்றி வருகிறது. இந்த பேரணிக்கு அனுமதி அளிக்க போலீசார் மறுத்து விட்டனர்.

அமித் ஷா வரும் ஹெலிகாப்டர் தரையிறங்கவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே பிரதமர் மோடி, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் பங்கேற்க இருந்த கூட்டங்களுக்கும் பாதுகாப்பு காரணங்களை காட்டி மேற்குவங்க அரசு அனுமதி மறுத்தது. இதனால் பாஜகவினர் கொதிப்படைந்தனர். மேற்குவங்க தேர்தல் களத்தில் பாஜகவும், திரிணாமுல் காங்கிரஸூம் நேரடியாக மோதி வருகிறது.

பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்களும், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களும் ஒருவரையொருவர் கடுமையாக தாக்கி பேசி வருகின்றனர். இதானல் மேற்குவங்க தேர்தல் களத்தில் தொடர்ந்து பரபரப்பு நிலவி வருகிறது.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close