[X] Close
 

ரயில் நிலையங்களில் விற்பனைக்கு வருகிறது குறைந்த விலை சேனிட்டரி நேப்கின், ஆணுறைகள் 


railwalys-toilet-policy-low-cost-sanitary-napkins-condoms-to-be-sold-at-stations

  • பாரதி
  • Posted: 26 May, 2018 15:03 pm
  • அ+ அ-

ரயில் நிலையங்களில் சேனிட்டரி நேப்கின்களையும் ஆணுறைகளையும் குறைந்த விலையில் விற்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

ரயில் நிலையங்களுக்குள் மட்டுமல்லாமல் ரயில்வே ஸ்டேஷன்களுக்கு வெளியே உள்ள கடைகளிலும் குறைந்த விலையில் சேனிட்டரி நேப்கின் மற்றும் காண்டம் விறபனை செய்ய நிர்வாகம் முடிவு செய்துள்ளது. 

இது குறித்து ரயில்வே தரப்பில், "ரயில் நிலையங்களிலும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் போதிய சுகாதார வசதிகள் இல்லாததால் அதன் அருகாமையில் வசிக்கும் குறிப்பாக சேரி, கிராமங்களில் வசிக்கும் மக்கள் திறந்துவெளியை ரயில்வே ட்ராக் பகுதிகளை கழிப்பிடமாகப் பயன்படுத்துகின்றனர்.

இதனால் ரயில்வே சுற்றுவட்டாரப் பகுதிகள் சுகாதரமற்ற பகுதியாக நோய் பரப்பும் பகுதியாக இருக்கிறது. இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், ரயில் நிலைய வளாகங்களிலேயே ஆண்கள், பெண்களுக்கென தனித்தனி கழிவறைகளைக் கட்டுவதென முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மக்கள் சுகாதாரத்தை பேண முடியும். பெண்கள் கழிவறைகளில் சேனிட்டரி நேப்கின்கள் வழங்கும் மெஷின்களைப் பொருத்துவதோடு அருகிலேயே பயன்படுத்தப்பட்ட நேப்கின்களை எரித்து சாம்பலாக்கும் சிறிய இன்சினரேட்டர் கருவியைப் பொருத்துவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கென பிரத்யேக சாய்தள பாதையுடன் கூடிய கழிவறைகளும் அமைக்கப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்




Kalathin Vasanai - Kindle Edition


m7

d7

[X] Close