[X] Close

கழிவறை முன் செல்ஃபி: அரசு ஊழியர்களுக்கு செக் வைத்த ஆட்சியர்


sitapur-govt-employees-asked-to-take-selfies-in-front-of-toilets

  • பாரதி ஆனந்த்
  • Posted: 26 May, 2018 14:17 pm
  • அ+ அ-

உத்தரப் பிரதேச மாநிலம் சீதாபூரில் தூய்மை இந்தியா திட்டத்தை முழு வீச்சில் செயல்படுத்தும் முனைப்பில் இறங்கியுள்ள மாவட்ட ஆட்சியர், ஊழியர்களுக்கு அதிரடி செக் ஒன்றை வைத்துள்ளார்.

அதன்படி, அரசு ஊழியர்கள் அனைவரும் தங்களது வீட்டில் உள்ள கழிவறை முன் நின்று செல்ஃபி எடுத்து அந்த புகைப்படத்தை அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். அந்த புகைப்படத்துடன் கழிவறை கட்டப்பட்டதற்காக அத்தாட்சி சான்றிதழ் ஒன்றையும் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருக்கிறார். திறந்தவெளியில் மலம் கழிப்பதை தடுப்பதற்காக இந்த முயற்சியை ஆட்சியர் எடுத்துள்ளாராம்.

இந்த உத்தரவுடன் நின்றுவிடவில்லை கெடுபிடி. ஒருவேளை உத்தரவின்படி புகைப்படத்தையும் அத்தாட்சி சான்றிதழையும் வைக்கவில்லை என்றால் மே மாதம் சம்பளம் நிறுத்திவைக்கப்படும் என்ற எச்சரிக்கையையும் விடுத்துள்ளார்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close