[X] Close

மேற்குவங்கத்தில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான பாஜக பெண் வேட்பாளர் மீது தாக்குதல்: கார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு


  • kamadenu
  • Posted: 13 May, 2019 08:05 am
  • அ+ அ-

மக்களவைக்கு நேற்று 6-வது கட்டமாக 59 தொகுதிகளில் தேர்தல் நடந்தது. மேற்குவங்கத்தில் 8 தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் கடால் என்ற தொகுதியில் பாஜக வேட் பாளராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான பாரதி கோஷ் போட்டியிடுகிறார். ஒரு காலத்தில் முதல்வர் மம்தா பானர்ஜியின் நம்பிக்கைக்குரியவராக இருந்தார். பின்னர், பாஜகவில் சேர்ந்த அவர், தேர்தலில் போட்டியிடுகிறார்.

கடால் தொகுதிக்கு உட்பட்ட கேஷ்பூர் என்ற இடத்தில் நேற்று காலை ஒரு வாக்குச்சாவடிக்கு பாரதிகோஷ் சென்றார். அப்போது, அவரை திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்கள் சூழ்ந்துகொண்டு தாக்கினர். இதில் கீழே விழுந்த பாரதி கோஷ் லேசான காயமடைந்தார். தாக்குதல் காரணமாக அவர் கண்ணீர்விட்டு அழுதார். தொடர்ந்து அவர் மீது திரிணமூல் தொண்டர்கள் கற்களை வீசி தாக்கினர். இதனால், அருகில் உள்ள கோயிலுக்குள் பாரதி கோஷ் தப்பி ஓடினார். அங்கும் சிலர் துரத்தி வந்து தாக்கியதால், உயிர் தப்ப கோயிலின் தடுப்பு சுவரை தாண்டிக் குதித்து பக்கத்தில் உள்ள காவல் நிலையத்துக்குச் சென்று தஞ்சமடைந்தார். மேலும், பாரதி கோஷின் கார் மீதும் சிலர் பெட்ரோல் குண்டுகளை வீசினர்.

பாரதி கோஷ் கூறுகையில், ‘‘மேற்குவங்கத்தின் கேஷ்பூர், காஷ்மீரைப் போல மாறிவிட்டது. என் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தப்பட்டது. என்னைக் கொல்ல வேண்டும் என்று அரசு நிர்வாகம் விரும்புகிறது’’ என்றார். இதற்கிடையே, மொபைல் போனுடன் வாக்குச்சாவடியி்ல் நுழைந்து வீடியோ எடுத்ததாக பாரதி கோஷ் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணையம் அறிக்கை கோரியுள்ளது. அவர் மீது வழக்கு பதிவு செய்யவும் உத்தரவிட்டது. கடந்த வியாழக் கிழமை இரவு நடந்த சோதனையில் பாரதரதி கோஷ் காரில் இருந்து ரூ.1.13 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, கிழக்கு மிட்னாப் பூர் மாவட்டத்தில் நேற்று முன் தினம் இரவு நடந்த மோதலின் போது துப்பாக்கிச் சூட்டில் பாஜக தொண்டர்கள் 2 பேர் காயமடைந் தனர். ஜர்கிராம் மாவட்டத்தில் ஏற்பட்ட மோதலில் பாஜக தொண்டர் ஒருவர் கொல்லப்பட்டார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close