[X] Close

புயல் நிவாரணப் பணிகளில் சுணக்கம்: ஒடிசா மாநிலத்தில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்


  • kamadenu
  • Posted: 13 May, 2019 08:09 am
  • அ+ அ-

-பி.டி.ஐ

ஃபானி புயல் நிவாரணப் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாகக் கூறி ஒடிசாவில் பொதுமக்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வங்கக் கடலில் உருவான ஃபானி புயல் கடந்த 3-ம் தேதி ஒடிசாவின் 14 மாவட்டங்களைத் தாக்கியது. இதில் 43 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மேலும் 21 பேர் ஃபானி புயல் காரணமாக இறந்துள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து புயலால் இறந்த வர்களின் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்துள்ளது. இதில் புரி மாவட்டத்தில் மட்டும் 39 பேர் இறந்துள்ளனர். மேலும் 241 பேர்காயமடைந்து மருத்துவமனை களில் சிகிச்சை பெற்று வருகின் றனர். 5 லட்சம் பேர் வீடுகளை இழந்தனர். புயலால் பெரும் பாதிப்புக்குள்ளான பல்வேறு பகுதிகளில் மாநில அரசு அதிகாரிகள் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆனால் புயல் தாக்கி 9 நாட்களான பின்னரும் நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகள் மிகவும் மந்த கதியில் நடந்து வருவதாகக் கூறி நேற்று புவனேஸ்வரில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நகரின் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம், சாலை மறியல் உள்ளிட்டவை நடைபெற்றன. இதனால் பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மின் விநியோகம், குடிநீர் விநியோகம், தொலைத்தொடர்பு சேவை இன்னும் நகர் முழுவதும் தொடங்கவில்லை என்று கூறி அவர்கள் ஆர்ப்பாட்டததில் ஈடுபட்ட னர். இதேபோல ஜெகத்சிங்பூர், கட்டாக், குர்தா மாவட்டங்களிலும் இயல்புநிலை திரும்பவில்லை. அங்கும் பொது மக்கள் சாலை மறியல், ஆர்ப்பாட்டங்களில் ஈடு பட்டு வருகின்றனர்.

ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட ஒரு பெண் கூறும்போது, “எங்களுக்கு குடிநீர் கூட அரசு ஏற்பாடு செய்யவில்லை. அடிப்படை தேவைகளுக்காக நாங்கள் பல இடங்களுக்குச் சென்று போராட வேண்டியுள்ளது. பல இடங்களில் இன்னும் மின் விநியோகம் வழங்கப்படவில்லை. எங்கள் அமைதிக்கும் ஓர் எல்லை உண்டு. இரவில் தூங்க முடியாமல் தவித்து வருகிறோம். அதனால்தான் இப்போது சாலையில் இறங்கிப் போராடுகிறோம்” என்றார்.

ஆனால் இன்று புவனேஸ்வர் நகரில் மின் விநியோகம் சீராகும் என்று செய்தி மற்றும் விளம்பரத்துறை செயலர் சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார்.

நவீன் பட்நாயக் பேட்டி

ஃபானி புயலால் ஒடிசாவில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. 41 பேர் உயிரிழந்துள்ளனர். புயலுக்குப் பிறகு மாநில முதல்வர் நவீன் பட்நாயக் முதல் முறையாக பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:ஆண்டுதோறும் இயற்கை சீற்றங்களால் ஒடிசா மாநிலம் பாதிக்கப்படுகிறது. தவிர பெரும் வெள்ளத்தாலும் மாநிலம் பாதிக்கப்படுகிறது. இந்த நேரத்தில் ஒடிசாவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும். இதைத்தான் நாங்கள் மத்திய அரசிடம் இருந்துஎதிர்பார்க்கிறோம். புயலால் பாதிக்கப்படும் போதெல்லாம், மத்தியஅரசு வழங்கும் நிதியுதவி, சேத மடைந்த உள்கட்டமைப்பு வசதிகளை தற்காலிகமாக சீரமைக்கவே உதவுகிறது. ஆனால், மாநில அரசு நிதிதான் உள்கட்டமைப்புகளை மறுகட்டமைக்க செலவிடப்படுகிறது. இது எங்கள் பொருளாதார நிலையை மேலும் நெருக்கடிக்கு உள்ளாக்குகிறது. இவ்வாறு நவீன் பட்நாயக் கூறினார்.

கடந்த 2000-ம் ஆண்டில் நவீன் பட்நாயக், ஒடிசா முதல்வராக முதல் முறை பதவியேற்றார். தற்போது மக்களவைத் தேர்தலுடன் ஒடிசா சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடைபெறுகிறது. இதில் தொடர்ந்து 5-வது முறையாக நவீன் பட்நாயக் போட்டியிடுகிறார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close