[X] Close

பிரதமர் மோடி மீது நடவடிக்கை கோரி தேர்தல் ஆணையத்துக்கு யெச்சூரி கடிதம்


  • kamadenu
  • Posted: 13 May, 2019 08:06 am
  • அ+ அ-

தேர்தல் நடத்தை விதிகளை மீறிய பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தலைமை தேர்தல் ஆணையத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி கடிதம் எழுதியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி கடந்த சனிக்கிழமை தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார். அப்போது, காஷ்மீரில் புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தான் பகுதியில் பாலகோட்டில் தீவிரவாத முகாம்கள் மீது துல்லிய தாக்குதல் நடத்த, தான் அனுமதி கொடுத்ததாகக் கூறினார். மோசமான வானிலை நிலவும் நேரத்தில் நிபுணர்களின் ஆலோசனைகளை மீறி தாக்குதல் நடத்த தான் அனுமதி கொடுத்ததாகவும், மேகங்கள் அதிகமாக இருந்தால் நமது போர் விமானங்கள் பாகிஸ்தான் ரேடாரில் தெரியாது என்று தனது அனுபவ அறிவைக் கொண்டு முடிவு செய்ததாகவும் கூறினார்.

இந்நிலையில், இதுகுறித்து தலைமை தேர்தல் ஆணையத்துக்கு சீதாராம் யெச்சூரி எழுதியுள்ள கடிதத்தில், ‘‘பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரங்களில் துல்லியத் தாக்குதல் குறித்து பேசி வருகிறார். மேலும், தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் ராணுவ நடவடிக்கைகள் தொடர்பான மிகவும் முக்கியமான விவரங்களை வெளியிடுகிறார். வாக்காளர்களைக் கவரும் வகையில் இதுபோன்ற தகவல்களை பிரதமர் மோடி பேசுகிறார். இது தேர்தல் நடத்தை விதிமீறலாகும். எனவே, தேர்தல் ஆணையம் இதில் தலையிட்டு பிரதமர் மோடிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close