[X] Close

கேரளாவில் பூரம் திருவிழாவை தொடங்கி வைத்தது ராமன் யானை


  • kamadenu
  • Posted: 13 May, 2019 08:08 am
  • அ+ அ-

கேரளாவில் ஆண்டுதோறும் நடைபெறும் பூரம் திருவிழா புகழ்பெற்றது. இதில் அலங் கரிக்கப்பட்ட சுமார் 100 யானைக ளின் அணிவகுப்பு நடைபெறுவது வழக்கம். குறிப்பாக நாட்டிலேயே உயரமான (3.22 மீட்டர்) ராமன் யானை, இவ்விழாவை தொடங்கி வைப்பதுண்டு. இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் ராமன் யானை மிதித்ததில் 2 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, திருச்சூர் திருவிழாவில் ராமன் பங்கேற்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது.

இந்தத் தடையை நீக்க வேண்டும் என யானை ஆர்வலர்களும் பக்தர்களும் கோரி வந்தனர். இதையடுத்து, ராமனை பரிசோதித்த கால்நடை மருத்துவர்கள் அடங்கிய நிபுணர் குழு, அது உடல் தகுதியுடன் இருப்பதாக மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கை சமர்ப்பித்தது. இதன் அடிப்படையில், பூரம் விழாவில் ராமன் பங்கேற்க பல்வேறு நிபந்தனைகளுடன் மாவட்ட ஆட்சியர் நேற்று முன்தினம் அனுமதி வழங்கினார்.

இந்நிலையில் திருச்சூர் பூரம் திருவிழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதன் தொடக்க மற்றும் முக்கிய நிகழ்ச்சியாக வடக்கும்நாதன் கோயிலின் தெற்கு நுழைவாயில் நேற்று திறக்கப்பட்டது. அப்போது வழக்கம்போல ராமன் யானை கோயிலின் கதவை திறந்து வைத்தது. எனினும், யானையைச் சுற்றி 10 மீட்டர் உயரத்துக்கு தடுப்ப அமைக்கப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேற்று அங்கு கூடி இருந்தனர். அவர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பூரம் விழாவை முன்னிட்டு பாதுகாப்பு பணிகளுக்காக 3,500 போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close