[X] Close

111 வயது முதியவர் டெல்லியில் வாக்களித்தார்: 1951 முதல் தவறாமல் வாக்குரிமையை செலுத்துகிறார்


111-1951

  • kamadenu
  • Posted: 13 May, 2019 08:01 am
  • அ+ அ-

டெல்லியிலேயே மிகவும் வயதான வாக்காளரான பச்சன் சிங் (111) நேற்று வாக்களித்தார். இவர் 1951-ம் ஆண்டு முதல் தவறாமல் வாக்களித்து வருகிறார்.

நாடாளுமன்ற மக்களவைக்கு நேற்று 6-ம் கட்ட தேர்தல் நடைபெற்றது. இதில் டெல்லியில் உள்ள திலக் விஹர் பகுதியில் உள்ள ஒரு வாக்குச் சாவடியில் 111 வயதான பச்சன் சிங் வாக்களித்தார். டெல்லியிலேயே மிகவும் வயதான வாக்காளரான இவர், கடந்த 1951-ம் ஆண்டு முதல் அனைத்து தேர்தல்களிலும் தவறாமல் வாக்களித்து வருகிறார்.

கடைசியாக கடந்த 2015-ம் ஆண்டு டெல்லியில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது, பச்சன் சிங் வாக்குச் சாவடிக்கு சைக்கிளில் சென்று வாக்களித்தார். ஆனால் கடந்த 3 மாதத்துக்கு முன்பு பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட சிங், படுத்த படுக்கையானார். இதனால், இந்த முறை அவரை வாக்குச் சாவடிக்கு காரில் அழைத்துச் சென்றனர். பின்னர் சக்கர நாற்காலியில் அமர்ந்து சென்று வாக்களித்தார். முன்பு போல அவரால் சரியாக பேச முடியவில்லை. எனினும் தன்னுடைய வாக்கு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது அவருக்கு தெரிந்திருக்கிறது. இதுகுறித்து அவர் கூறும்போது, “நமக்காக பாடுபட்டவர்களுக்காக நான் வாக்களிப்பேன்” என்றார். அதேநேரம், ஆம் ஆத்மி என்று ஒரு கட்சி இருப்பது பற்றியோ, அர்விந்த் கேஜ்ரிவால் முதல்வராக இருப்பது பற்றியோ அவருக்கு தெரியவில்லை.

இதுகுறித்து பச்சன் சிங்கின் இளைய மகன் ஜஸ்பீர் சிங் (63) கூறும்போது, “1951-ம் ஆண்டு முதல் அனைத்து தேர்தலிலும் எனது தந்தை தவறாமல் வாக்களித்து வருகிறார். ஆனால், ஆம் ஆத்மி கட்சி இருப்பது பற்றி அவருக்கு தெரியாது. ஒவ்வொரு தேர்தலிலும் பாஜகவுக்கும் காங்கிரஸுக்கும் இடையேதான் போட்டி என அவர் கருதுகிறார்” என்றார்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close