[X] Close

முகமது அலி ஜின்னாவை பிரதமராக்கியிருந்தால் பாகிஸ்தான் பிரிந்திருக்காது : பாஜக வேட்பாளரின் பேச்சால் சர்ச்சை


  • kamadenu
  • Posted: 12 May, 2019 15:14 pm
  • அ+ அ-

நாடு விடுதலை அடைந்த போது முகமது அலி ஜின்னாவை பிரதமராக்கியிருந்தால் இந்தியாவும் பாகிஸ்தானும் பிரிந்திருக்காது என்று மத்திய பிரதேச மாநிலத்தில் பாஜக வேட்பாளர் பேசியிருப்பது சர்ச்சையாகியுள்ளது.

 

நாடு விடுதலையடைந்த போது பிரதமராகப் பதவியேற்பதில் ஜவஹர்லால் நேரு பிடிவாதமாக இருந்தார் என்று மத்திய பிரதேச மாநில ரத்லம் தொகுடி பாஜக வேட்பாளர் பேருசிங் தாமோர் கூறியிருப்பது சர்ச்சையாகியுள்ளது.

 

நேரு பிரதமாராகாமல் முகமது அலி ஜின்னாவைப் பிரதமராக்கியிருந்தால் இந்தியாவும் பாகிஸ்தானும் பிரிந்திருக்காது என அவர் தெரிவித்துள்ளது சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.

 

மேலும் அவர் கூறும்போது ஜின்னா நன்கு படித்தவர் என்றும் வழக்கறிஞராகப் பணியாற்றியவர் என்றும் அவர் புகழ்ந்து பேசினார். தேசப்பாதுகாப்பு, பாகிஸ்தான் எதிர்ப்பு என்று பாஜக பிரச்சார வலையை விரித்துள்ள நிலையில் ஜின்னாவை இவர் புகழ்ந்து பேசியுள்ளது பாஜக தரப்பில் எப்படி பார்க்கப்படுகிறது என்று தெரியவில்லை.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close