[X] Close

தெளிவாக தெரியுது,பாஜக ஆட்சியில் இருந்து சென்றுவிடும்: பிரியங்கா காந்தி கருத்து


  • kamadenu
  • Posted: 12 May, 2019 14:38 pm
  • அ+ அ-

-ஐ.ஏ.என்.எஸ்

மக்கள் கோபத்துடன், வேதனையுடன் இருப்பதால், அவர்களின் வேதனையை வாக்குகளில் தெரிவித்துள்ளார்கள், ஆதலால் பாஜக ஆட்சியில் இருந்து அகன்றுவிடும் என்பது தெளிவாகத் தெரிகிறது என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்தார்.

மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது. இதுவரை 5 கட்டத் தேர்தல் முடிந்துள்ள நிலையில் 6-ம் கட்டமாக 59 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

பிஹாரில் 8 தொகுதிகள், ஹரியாணாவில் 10, ஜார்க்கண்ட் 4, மத்திய பிரதேசம் 8, உத்தரபிரதேசம் 14, மேற்குவங்காளம் 8, டெல்லியில் 7 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறு வருகிறது.

மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 10.17 கோடி ஆகும். இதற் காக 1.13 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 979 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, டெல்லி துக்ளக் லேன் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடியில் தனது வாக்கை இன்று பதிவு செய்தார். 

 அதன்பின் டெல்லியில் உள்ள லோதி எஸ்டேட் பகுதியில் உள்ள சர்தார் படேல் வித்யாலயா பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குப்பதிவு மையத்தில் காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி, அவரின் கணவர் ராபர்ட் வத்ரா ஆகியோர் வாக்களித்தனர்.

வாக்களித்தபின் பிரியங்கா காந்தி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், " மத்தியில் ஆளும் பாஜக அரசு மீது மக்களுக்கு மகிழ்ச்சியும் இல்லை, திருப்தியும் இல்லை. கோபத்துடன் இருக்கிறார்கள். குறிப்பாக உத்தரப்பிரதேச மக்களிடம் இல்லை. மக்கள் தங்களின் கோபத்தையும், வேதனையையும் வாக்குகளில் காண்பித்திருக்கிறார்கள்.

ஆதலால், பாஜக இந்த தேர்தலில் தோல்வி அடையும், ஆட்சியில் இருந்து அகலும் என்று தெளிவாகத் தெரிகிறது. டெல்லியில் தேர்தலுக்கு பின் வரும் முடிவுகளும் மகிழ்ச்சி அளிக்கும் விதமாக இருக்கும் என நம்புகிறேன்.

கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலின்போது, பிரதமர் மோடி அளித்த வாக்குறுதிகள் குறித்து இந்த முறை மோடி எதையும் பேசவில்லை. ஆனால், எங்கள் கட்சியின் பிரச்சாரம் ஒருபோதும் எதிர்மறையாக இருக்கவில்லை, பாஜக மட்டுமே அவ்வாறு பிரச்சாரம் செய்தது.

சாமானிய மக்களை பாதித்த விஷயங்கள்,  பிரச்சினைகள் குறித்து மட்டுமே காங்கிரஸ் கட்சி எழுப்பி பிரச்சாரம் செய்தது. அதற்கான தீர்வுகளையும் சுட்டிக்காட்டி, தேர்தல் அறிக்கையாக வெளியிட்டது. ஆனால், பிரதமர் மோடி, முக்கியத்துவம் இல்லாத விஷயங்களை தேர்தலில் பேசினார்.

எதிர்க்கட்சிகள் முன்வைத்த எந்த கேள்விக்கும் மோடியால் பதில் அளிக்க முடியவில்லை, பதில் அளிக்கவும் இல்லை. மக்களின் வங்கிக்கணக்கில் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்வேன், ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள், விவசாயிகளுக்கு நல்ல வருமானம் ஆகியவை குறித்து பேச மோடி மறுக்கிறார். ராகுல் காந்தி கேட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் மோடி மவுனமாக இருக்கிறார் " எனத் தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி நிர்மான் பவனில் தனது வாக்கை பதிவு செய்தார். அவருடன் காங்கிரஸ் வேட்பாளர் ஷீலா தீட்சித் உடன் வந்திருந்தார்.

வாக்களிக்கலாம் வாங்க

'மிஸ்டர் லோக்கல்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close