[X] Close

வாக்குப்பதிவு தொடங்கும் முன்பே 50 ஓட்டுகள் எப்படி?: திடுக்கிட்ட வாக்காளர்கள்: தேர்தல் அதிகாரி பதில் கூற மறுப்பு


50

  • kamadenu
  • Posted: 12 May, 2019 12:01 pm
  • அ+ அ-

-பி.டி.ஐ

தலைநகர் டெல்லியில் வாக்குப்பதிவு தொடங்கியது முதல் பல்வேறு இடங்களில் மின்னணு வாக்கு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதால், மக்கள் வாக்களிப்பதில் சிரமம் ஏற்பட்டது

வாக்குப்பதிவு தொடங்கும் முன் வாக்கு எந்திரத்தில் 50 வாக்குகள் பதிவானது எப்படி என்று ஆம் ஆத்மி கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. 5 கட்டத் தேர்தல் நடந்து முடிந்துவிட்ட நிலையில் இன்று 6-ம் கட்டமாக 59 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடக்கிறது. இதில் டெல்லியில் உள்ள 7 தொகுதிகளுக்கும் தேர்தல் நடக்கிறது.

ஆனால், டெல்லியில் இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கியபின் பல்வேறு இடங்களில் வாக்கு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதால் மக்கள் வாக்களிக்க சிரமப்பட்டனர்.

டெல்லியில் உள்ள மதியா மஹால் பகுதியைச் சேர்ந்த ஆதர்ஷ் குப்தா அப்பகுதியில் உள்ள வாக்குப்பதிவு மையத்திக்கு சென்றபோது அங்குள்ள  84,85,86 எண்கள் கொண்ட வாக்குப்பதிவு மையத்தில் எந்திரங்கள் முறையாக வேலை செய்யாததால் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.

ஆம்ஆத்மி கட்சியின் எம்எல்ஏ சோம்நாத் பாரதி ட்விட்டரில் கூறுகையில், " மாலவியா நகரில் உள்ள 116,117,122 ஆகிய எண்கள் கொண்ட வாக்குப்பதிவு மையத்தில் வாக்குஎந்திரங்கள் செயல்படவில்லை.

132 எண் கொண்ட வாக்கு மையத்தில், ஹஸ்ரானி என்பவர் முதல் நபராக வாக்களிக்கச் சென்றபோது வாக்குப்பதிவு தொடங்காமலேயே வாக்குஎந்திரத்தில் 50 வாக்குகள்  பதிவானதாக காட்டியது. இது எவ்வாறு நடந்தது" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

SheilaDixitVote.jpg 

ஆனால், இதுகுறித்து டெல்லி தலைமைத் தேர்தல் அதிகாரி எந்தவிதமான கருத்தையும் கூற மறுத்துவிட்டார்.

மேலும், மதிலா மஹால், பாலிமாறன் பகுதியில் பல இடங்களில்  வாக்குப்பதிவு எந்திரங்கள் செயல்படவில்லை என்று காங்கிரஸின் சாந்தினி சவுக் தொகுதி வேட்பாளர் ஜே.பி. அகர்வால் குற்றம்சாட்டியுள்ளார்.

இதேபோல, திலக் நகரில் 27-ம் எண் கொண்ட வாக்குமையத்திலும் வாக்கு எந்திரம் காலையில் இருந்து  வேலைசெய்யவில்லை. இங்குதான் ஆம் ஆத்மி கட்சியின் ஆதரவாளர்கள் அதிகம் உள்ள பகுதியாகும் வேண்டுமென்றே இங்கு வாக்கு எந்திரங்களை செயல்படவிடாமல் செய்துள்ளார்கள் என்று ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏ ஜர்நைல் சிங் குற்றம்சாட்டியுள்ளார்.

kailasj.jpg 

டெல்லி போக்குவரத்து துறை அமைச்சர் கைலாஷ் கெலாட் கூறுகையில், " வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டால் அடுத்த 10 நிமிடங்களில் சரி செய்யப்படுகிறது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தாலும், அது உண்மையில்லை. நஜாப்கார்க் தொகுதியில் பல வாக்கு மையங்களில், வாக்கு எந்திரங்களில் உள்ள வேட்பாளர்களின் பெயர் சரியாகத் தெரியாததால், மக்கள் வாக்களிக்க சிரமப்படுகின்றனர். பல வாக்குகள் நீக்கப்பட்டுள்ளன" எனக் குற்றம்சாட்டினார்.

டெல்லியில் 1.43 கோடி மக்கள், 164 வேட்பாளர்களின் தலைவிதியை முடிவு செய்கின்றனர். இதில் 18 வேட்பாளர்கள் பெண்கள், 43 பேர் சுயேட்சை வேட்பாளர்கள்.

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close