[X] Close

'மோடியின் வெறுப்பை, எங்களின் அன்பு வெல்லும்': ராகுல் காந்தி பளீர் கருத்து


  • kamadenu
  • Posted: 12 May, 2019 11:29 am
  • அ+ அ-

-பி.டி.ஐ

மக்களவைத் தேர்தலில் நாங்கள் அன்பை பயன்படுத்தி மக்களிடம் பிரச்சாரம் செய்தோம், பிரதமர் நரேந்திர மோடி மக்களிடம் வெறுப்பை பயன்படுத்தினார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் செய்தார்.

மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது. இதுவரை 5 கட்டத் தேர்தல் முடிந்துள்ள நிலையில் 6-ம் கட்டமாக 59 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

பிஹாரில் 8 தொகுதிகள், ஹரியாணாவில் 10, ஜார்க்கண்ட் 4, மத்திய பிரதேசம் 8, உத்தரபிரதேசம் 14, மேற்குவங்காளம் 8, டெல்லியில் 7 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறு வருகிறது.

மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 10.17 கோடி ஆகும். இதற் காக 1.13 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 979 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, டெல்லி துக்ளேக் லேன் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடியில் தனது வாக்கை இன்று பதிவு செய்தார். வெள்ளை குர்தா அணிந்து, காங்கிரஸ் மூத்த தலைவர் அஜய் மக்கானுடன் வாக்குப்பதிவு மையத்துக்கு வந்த ராகுல் காந்தி தனது வாக்கைப் பதிவு செய்தார்.

RahulGandhiVote.jpg 

வாக்களித்துவிட்டு வந்த ராகுல் காந்தி நிருபர்களிடம் கூறுகையில் " இந்த மக்களவைத் தேர்தலில் நாங்கள் அன்பை பயன்படுத்தி பிரச்சாரம் செய்தோம். ஆனால், பிரதமர் மோடி, வெறுப்பை பயன்படுத்தினார். இந்த தேர்தலில் பாஜகவுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கடும் போட்டி இருக்கும். ஆனால், இறுதியில் அன்புதான் வெல்லும்

இந்த தேர்தலில் 4 முக்கிய விஷயங்கள் பிரதானமாக இருக்கின்றன. இந்த 4 முக்கிய  பிரச்சினைகளும் எங்களுடைய பிரச்சினைகள் அல்ல மக்களின் பிரச்சினைகள். குறிப்பாக வேலையின்மை, விவசாயிகளின் பரிதாப நிலை, பணமதிப்பிழப்பு விவகாரம், கேலிக்கூத்தான கப்பார் சிங் டேக்ஸ்(ஜிஎஸ்டி வரி), ஊழல் மற்றும் ரஃபேல் போர் விமான விவகாரம் முக்கியமாக இருக்கின்றன" எனத் தெரிவித்தார்.

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close