[X] Close

காங்கிரஸின் மனநிலையை சாம் பிட்ரோடா பிரதிபலிக்கிறார்: அமித் ஷா கடும் தாக்கு


  • kamadenu
  • Posted: 12 May, 2019 09:40 am
  • அ+ அ-

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் நெருங்கிய நண்பரும் வெளிநாடு வாழ் காங்கிரஸ் ஆதரவாளர்களின் பொறுப்பாளருமான சாம் பிட்ரோடா, கடந்த வியாழக்கிழமை செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது கடந்த 1984-ம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிராக நடந்த வன்முறைகள் குறித்து கேள்வி எழுந்தது.

அதற்கு சாம் பிட்ரோடா பதில் அளிக்கையில், ‘நடந்தது நடந்துவிட்டது; அதனால் என்ன..’ என்றுகூறியதாக சர்ச்சை எழுந்தது. அதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது. இதையடுத்து தனது செயலுக்கு பிட்ரோடா மன்னிப்புக் கேட்டுள்ளார். இந்நிலையில் அமித் ஷா நேற்று டெல்லியில் கூறியதாவது:1984-ல் டெல்லியில் நடந்த சீக்கியர் கலவரத்தின்போது ஆயிரக்கணக்கில் சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். அப்போது பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி அதைநியாயப்படுத்தினார். இந்த வழக்குகளில் ஒருவரும் தண்டிக்கப்படவில்லை. இந்நிலையில் சமீபத்தில் இதுகுறித்து பேசிய சாம் பிட்ரோடா, நடந்தது நடந்துவிட்டது; அதனால் என்ன என்ற ரீதியில்பேசியுள்ளார். சாம் பிட்ரோடாவின் கருத்துகள், காங்கிரஸின் மனநிலையைப் பிரதிபலிக்கின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close