[X] Close

பாஜகவை ட்விட்டரில் பின்தொடர்வோர் எண்ணிக்கை 1.10 கோடியாக அதிகரிப்பு


1-10

  • kamadenu
  • Posted: 12 May, 2019 09:36 am
  • அ+ அ-

பாஜகவை ட்விட்டரில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 10 லட்சமாக உயர்ந்துள்ளது.

மக்களை எளிதில் சென்றடையும் ஊடகமாக விளங்குவதால், அரசியல் கட்சிகளும், அதன் தலைவர்களும் தற்போது சமூக வலைதளங்களை அதிக அளவில் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இதுபோன்ற சமூக வலைதளங்களில் குறிப்பிட்ட கட்சியை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையை பொறுத்து, அதன் செல்வாக்கு மதிப்பிடப்படுகிறது. அந்த வகையில், பாஜகவின் ட்விட்டர் கணக்கினை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை தற்போது 1.10 கோடியாக உயர்ந்துள்ளது. இதனை நேற்று தங்கள் ட்விட்டர் பக்கத்தில் அக்கட்சி தெரிவித்துள்ளது. இதேபோல், காங்கிரஸின் ட்விட்டர் கணக்கினை 51.4 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close