[X] Close

அவுரங்கசீப் போன்றவர் அகிலேஷ்: உ.பி. முதல்வர் ஆதித்யநாத் விமர்சனம்


  • kamadenu
  • Posted: 12 May, 2019 09:37 am
  • அ+ அ-

-பி.டி.ஐ,

‘‘தந்தையை ஆட்சியில் இருந்து நீக்கி சிறையில் தள்ளிய அவுரங்கசீப்பை போன்றவர் அகிலேஷ் யாதவ்’’ என்று உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் விமர்சித்துள்ளார்.

உ.பி. முதல்வர் ஆதித்யநாத் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்தியில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:தந்தையை சிறையில் தள்ளிய அவுரங்கசீப்பை போன்ற ஒருவர் (அகிலேஷ்), எதிரியுடன் (மாயாவதி) கூட்டணி வைத்துள்ளார். மே 23-ம் தேதி வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு இருவரும் ஒருவரை ஒருவர் மீண்டும் மோசமாகத் திட்டிக் கொள்வார்கள். வெள்ளத்தின் போது பாம்புகள், தவளைகள், தேள்கள் ஒன்றாக வருவது போன்று, ‘மெகா கூட்டணி’ தலைவர்கள் தற்போது உள்ளனர்.

நானும் பிரதமர் மோடிஜியும் அகிலேஷ், மாயாவதி ஆகியோரின் கடைகளை மூடினால், ‘மெகா கூட்டணி’ என்ற பெயரில் இன்னொரு கடை திறந்து மக்களை ஏமாற்றுகின்றனர். எனினும், மே 23-ம் தேதி அந்தக் கடையும் மக்களால் மூடப்பட்டுவிடும். எனவே, உங்கள் வாக்குகளை வீணாக்காதீர்கள். நன்றாக சிந்தியுங்கள், புரிந்து கொள்ளுங்கள், புதிய வலிமையான இந்தியாவை உருவாக்குவதில் நீங்களும் பங்கேற்று வாக்களியுங்கள்.

இவ்வாறு ட்விட்டரில் ஆதித்யநாத் கூறியுள்ளார்.-

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close