[X] Close

கடந்த 5 ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி, அமைச்சர்களின் பயணத்துக்காக ரூ.393 கோடி செலவு


5-393

  • kamadenu
  • Posted: 12 May, 2019 09:34 am
  • அ+ அ-

-பி.டி.ஐ

கடந்த 5 ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமைச்சர்களின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணத்துக்காக ரூ.393 கோடி செலவாகி உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மும்பையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் அனில் கல்காலி, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் (ஆர்டிஐ) கீழ் பிரதமர் அலுவலகத்துக்கு ஒரு மனு அனுப்பி இருந்தார். அதில், கடந்த 2014-ம் ஆண்டு முதல் பிரதமர் மற்றும் அமைச்சர்களின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணச் செலவு விவரங்களை கோரி இருந்தார். இதற்கு பிரதமர் அலுவலகம் பதில் அளித்துள்ளது. அதில், பிரதமர் மற்றும் கேபினட் அமைச்சர்களின் வெளிநாட்டு பயணத்துக்காக ரூ.263 கோடியும் உள்நாட்டு பயணத்துக்காக ரூ.48 கோடியும் செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோல இணை அமைச்சர்களின் வெளிநாட்டு பயணத்துக்காக ரூ.29 கோடியும் உள்நாட்டு பயணத்துக்காக ரூ.53 கோடியும் செலவிடப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. பிரதமர் மற்றும் அனைத்து அமைச்சர்களின் பயணத்துக்காக கடந்த 5 ஆண்டுகளில் மொத்தம் ரூ.393.58 கோடி செலவாகி உள்ளது.

ஆனால், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளிநாட்டு பயண செலவு தொடர்பான கேள்வி ஒன்றுக்கு மாநிலங்களவையில் மத்திய அரசு அளித்த பதிலில், ரூ.2,021 கோடி செலவிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 49 முறை வெளிநாடு பயணம்பிரதமர் நரேந்திர மோடி மே 2014 முதல் பிப்ரவரி 2019 வரையிலான காலத்தில் 49 முறை வெளிநாடுகளுக்கு பயணம் செய்துள்ளதாக பிரதமர் அலுவலக இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்களிக்கலாம் வாங்க

'மிஸ்டர் லோக்கல்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close