[X] Close

காஷ்மீரில் கால் பதித்துள்ளோம்: ஐஎஸ் தீவிரவாத அமைப்பு அறிவிப்பு


  • kamadenu
  • Posted: 12 May, 2019 09:31 am
  • அ+ அ-

கடந்த 2014-ம் ஆண்டில் ‘இஸ்லாமிக் ஸ்டேட் ஆப் இராக் அண்ட் சிரியா' (ஐஎஸ்ஐஎஸ்) என்ற தீவிரவாத அமைப்பு இராக், சிரியாவில் பெரும் பகுதியை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது.

ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு இரு நாடுகளிலும் அந்த அமைப்பு ஒடுக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம், எகிப்து, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் உட்பட 18-க்கும் மேற்பட்ட நாடுகளிலும் ஐஸ்ஐஎஸ் அமைப்பு கால் ஊன்றி நாச வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. உலகம் முழுவதும் ‘இஸ்லாமிய ஆட்சியை' ஏற்படுத்த போவதாக அந்த அமைப்பு கூறிவருகிறது. கடந்த ஈஸ்டர் பண்டிகையின்போது இலங்கையில் 3 தேவாலயங்கள், 3 நட்சத்திர ஓட்டல்கள் உட்பட 8 இடங்களில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்புகளுக்கு ஐஎஸ்ஐஎஸ் பொறுப்பேற்றது தெற்காசிய நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்தப் பின்னணியில் காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் நேற்று முன்தினம் நடந்த சண்டையில் உமர் என்ற தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார். அந்த தீவிரவாதி தங்கள் அமைப்பைச் சேர்ந்தவர் என்று ஐஎஸ்ஐஎஸ் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த அமைப்பின் அமக் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘எங்களது புதிய மாகாணம் விலாய ஆப் ஹிந்த் ’’என்று தெரிவித்துள்ளது. முதல்முறையாக காஷ்மீரில் கால் ஊன்றியிருப்பதாக ஐஎஸ்ஐஎஸ் பகிரங்கமாக அறிவித்துள்ளது.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close