[X] Close

உலகின் மிகப்பெரிய தொலைநோக்கியை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றும் இந்தியா


  • kamadenu
  • Posted: 12 May, 2019 09:07 am
  • அ+ அ-

உலகின் மிகப்பெரிய தொலை நோக்கியை (டெலஸ்கோப்) உருவாக்கும் முயற்சியில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது.

மும்பையை அடுத்த வொர்லியில் உள்ள நேரு அறிவியல் மையத்தில் ‘விஞ்ஞான் சமகம்’ என்ற நிகழ்ச்சி கடந்த 9-ம் தேதி நடைபெற்றது. ஏராளமான விஞ்ஞானிகள் பங்கேற்ற இதில், ‘தர்ட்டி மீட்டர் டெலஸ்கோப்’ (டிஎம்டி) என்ற திட்டத்தின் இணை இயக்குநரும் புனே நகரில் உள்ள இன்டர் யுனிவர்சிட்டி சென்டர் பார் அஸ்ட்ரானமி அன்ட் அஸ்ட்ரோபிசிக்ஸைச் (ஐயுசிஏஏ) சேர்ந்தவருமான ஏ.என்.ராமபிரகாஷ் பேசியதாவது:அமெரிக்காவின் ஹவாய் தீவில் உள்ள மவுனா கீ என்ற இடத்தில் உலகின் மிகப்பெரிய தொலைநோக்கியை வடிவமைத்து உருவாக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன் கட்டுப்பாட்டு வழிமுறை, மென்பொருள் மற்றும் கருவிகளை உருவாக்குவதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது. டெலஸ்கோப் கட்டுமானப் பணிகள் இந்த ஆண்டே தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது 2029-30-ல் செயல்பாட்டுக்கு வரும். இதன் மூலம், பிரபஞ்சத்தின் மிகப்பெரிய படத்தைப் பெற முடியும்.

இந்த தொலைநோக்கிக்கான சென்சார் உள்ளிட்ட முக்கிய பாகங்கள் மும்பை, பெங்களூரு, புதுச்சேரி உள்ளிட்ட நகரங்களில் உள்ள தொழிற்சாலைகளில் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதுமட்டுமல்லாமல் ஐயுசிஏஏ, இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் அஸ்ட்ரோபிசிக்ஸ் (பெங்களூரு), ஆர்யபட்டா ரிசர்ச் இன்ஸ்டிடியூட் ஆப் அப்சர்வேஷன் சயின்சஸ் (நைனிடால்) உள்ளிட்ட இந்திய கல்வி நிறுவனங்களும் இந்த திட்டத்தில் இணைந்து பணியாற்றி வருகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close