[X] Close

6-ம் கட்ட மக்களவைத் தேர்தல்; 59 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு: பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு- அகிலேஷ் யாதவ் உட்பட 979 பேர் போட்டி


6-59-979

  • kamadenu
  • Posted: 12 May, 2019 09:01 am
  • அ+ அ-

மக்களவைத் தேர்தலில் 6-ம் கட்ட மாக இன்று 59 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதற்காக பலத்த போலீஸ் பாது காப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள் ளன.

ஏப்ரல் 11-ம் தேதி முதல் மே 19-ம் தேதி வரை 7 கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. இதுவரை 5 கட்ட மக்களவைத் தேர்தல் முடிந்துள்ள நிலையில் 6-ம் கட்டமாக 59 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

பிஹாரில் 8 தொகுதிகள், ஹரியாணாவில் 10, ஜார்க்கண்ட் 4, மத்திய பிரதேசம் 8, உத்தரபிரதேசம் 14, மேற்குவங்காளம் 8, டெல்லியில் 7 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

மொத்த வாக்காளர்கள் எண் ணிக்கை 10.17 கோடி ஆகும். இதற் காக 1.13 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 979 வேட் பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இந்த மாநிலங்களில் கடந்த ஒரு மாதமாக தீவிர தேர்தல் பிரச்சாரம் நடைபெற்று வந்தது. தேர்தலையொட்டி, பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா உள்ளிட்டோர் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர். 6-ம் கட்டத் தேர்தல் நடைபெறும் 59 தொகுதிகளில் நேற்றுமுன்தினம் மாலை 5 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது.

உத்தரபிரதேச முன்னாள் முதல் வர் அகிலேஷ் யாதவ், மத்திய அமைச்சர்கள் ராதா மோகன் சிங், நரேந்திர சிங் தோமர், ஹர்ஷவர்த் தன், மேனகா காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங், கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர், பாஜக வேட்பாளர் பிரக்யா சிங் தாக்குர், ஆம் ஆத்மி வேட்பாளரும், சமூக சேவகருமான ஆதிஷி மர் லேனா, டெல்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி, டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித், ஒலிம்பிக் கில் பதக்கம் வென்ற விஜேந்தர் சிங், மத்திய அமைச்சர்கள் ராவ் இந்தர்ஜித் சிங், கிருஷண் பால் குர்ஜார், முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா, முன்னாள் மத்திய அமைச்சர் குமாரி செல்ஜா, முன்னாள் கிரிக்கெட் வீரர் கீர்த்தி ஆசாத் உள்ளிட்டோர் இந்த தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் ஆவர். இவர்கள் நேற்றுமுன்தினம் இறுதி கட்ட தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

59 தொகுதிகளிலும் இன்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் வாக்குப்பதிவு நடைபெறும் 8 தொகுதிகளிலும் அதிகபட்சமாக 70 ஆயிரம் பாது காப்பு படையினர் நிறுத்தப் பட்டுள்ளனர்.

பதற்றமான, மிகப் பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீஸார் நிறுத்தப்பட்டுள்ளனர். வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளுக்கு மின்னணு வாக் குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளன. வாக்குச் சாவடி அதிகாரிகளும் நேற்று இரவு வாக்குச்சாவடிக்குச் சென்று சேர்ந்துவிட்டனர்.

7-ம் கட்டத் தேர்தல்

இறுதியாக, 7-ம் கட்ட மக் களவைத் தேர்தல் வரும் மே 19-ம் தேதி 59 தொகுதிகளுக்கு நடைபெற வுள்ளது. இந்தத் தொகுதிகளுக் கான தேர்தல் பிரச்சாரம் மே 17-ம் தேதி மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது.

டெல்லியின் 7 தொகுதிகளிலும் இன்று தேர்தல் நடைபெறுவதால் அங்கு 60 ஆயிரம் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து டெல்லி போலீஸ் கமிஷனர் அமுல்யா பட்நாயக் கூறும் போது, “தலைமைத் தேர்தல் ஆணையர் உத்தரவின்படி தேர்தல் பாதுகாப்புப் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறோம். தேர்தலின் போது டெல்லியில் எந்தவித அசம்பா வித சம்பவங்களும் நடைபெறாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வாக்குச்சாவடிகளில் உள்ளூர் போலீஸார், மத்திய சிறப்பு அதிரடிப் படை போலீஸார் பாதுகாப்புப் பணி யில் ஈடுபடுவர். மேலும் கண்காணிப் புப் படையினர் ரோந்து வாகனத்தில் சுற்றி வந்து கண்காணிப்பர்.

ஏதாவது அசம்பாவித சம்பவங் கள் நடந்தால் அதைக் கையாள் வதற்கு போலீஸ் கட்டுப்பாட்டு அறை தயாராக வைக்கப்பட் டுள்ளது. வாக்குப்பதிவைத் தடுக்க முயலும் சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். டெல்லியின் அனைத்துப் பகுதி களிலும் தேர்தல் நடத்தை நெறி முறைகள் கடுமையாக அமலாக் கப்பட்டுள்ளன. மதுவகைகள் விநி யோகம் செய்வது தடுக்கப்படும்” என்றார்,

டெல்லி போலீஸ் துணை கமிஷனர் மதூர் வர்மா கூறும்போது, “வாக்குச்சாவடியைக் கைப்பற்ற முயலுதல், வாக்குச்சாவடியைத் தாக்குதல் போன்ற சம்பவங்களைத் தடுக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன. முக்கிய வாக்குச்சாவடி களில் கூடுதல் போலீஸார், சிறப்பு அதிரடிப் படைக் குழுவினர் நிறுத்தப் படுவர்.

வாக்குப்பதிவு முடிந்ததும், மின் னணு வாக்குப்பதிவு இயந்திரங் களை மிகவும் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையத்துக்குக் கொண்டு செல்ல பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரவில் வாக்காளர்களுக்கு பணம் வழங்குவதைத் தடுக்கவும் இரவு நேர ரோந்துப் பணிகளை போலீஸார் மேற்கொண்டு வருகின்றனர்” என்றார்.

டெல்லியில் மட்டும் 39 ஆயிரம் போலீஸார், 13 ஆயிரம் ஊர்க்காவல் படையினர், துணை ராணுவத்தைச் சேர்ந்த 47 கம்பெனி வீரர்கள், போலீஸ் கட்டுப்பாட்டு அறையைச் சேர்ந்த போலீஸார், போக்குவரத்து போலீஸார் என 60 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close