[X] Close

நாட்டை எப்படி ஆளக்கூடாது என்பதற்கு பிரதமர் மோடியே உதாரணம்: ராகுல் காந்தி விமர்சனம்


  • kamadenu
  • Posted: 11 May, 2019 21:22 pm
  • அ+ அ-

நாட்டை எப்படி ஆளுக்கூடாது என்பதற்கு பிரதமர் மோடியே உதாரணம் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

மத்திய பிரதேச மாநிலம் கார்கோனில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் அவர் பேசியதாவது:

பிரதமர் மோடியால் ரபேல் போர் விமான ஊழல் பற்றி கேள்விகளுக்கு பதிலளிக்க முடியவில்லை. ரபேல் குறித்து நான் கேள்வி எழுப்பினால், மோடியால் பதிலளிக்க முடியவில்லை. 21 மணி நேரம் உழைத்தும் ரபேல் குறித்து பதிலளிக்க முடியவில்லை.

பிரதமர் மோடியை பார்த்து தான் எப்படி ஆட்சி நடத்தக்கூடாது என்பதை தெரிந்து கொண்டேன். மக்களின் குரலை கேட்காமல் ஆட்சி செய்தால், நாடு இயங்காமல் போகும்.

நாடாளுமன்றம் அல்லது குஜராத் என எங்குவேண்டுமானாலும், பிரதமர் மோடி என்னுடன் விவாதம் நடத்தட்டும். 15 நிமிடத்தில் அவர் உங்கள் முன் முகத்தை காட்ட முடியாது என நாட்டின் இளைஞர்களுக்கு உறுதியளிக்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close