[X] Close

அழகுபடுத்திக் கொள்ள மாதந்தோறும் ரூ. 80 செலவு செய்கிறாரா பிரதமர் மோடி? - தவறான வீடியோவை இணைத்தது அம்பலம்


80

  • kamadenu
  • Posted: 11 May, 2019 18:04 pm
  • அ+ அ-

பிரதமர் நரேந்திர மோடியை ஒப்பனை கலைஞர் அழகுப்படுத்துவது போன்ற வீடியோ ஒன்று அண்மையில் சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவுடன், ‘‘தகவல் அறியும் உரிமை சட்டம் வழியாக பெற்ற தகவல்கள்படி, பிரதமர் நரேந்திர மோடியின் ஒப்பனை செலவுகளுக்காக மாதந்தோறும் சராசரியாக 80 லட்ச ரூபாய் வழங்கப்பட்டுள்ளது" என்று தகவலும் சமூகவலை தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

இந்த வீடியோ  பேஸ்புக்கிலும், ட்விட்டரிலும் பல லட்சக்கணக்கான முறை பகிரப்பட்டுள்ளது. இதே செய்தியோடு குருகிராம் காங்கிரஸ்  அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் இந்த காணொலி பகிரப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பிரதமர் மோடி மீது விமர்சனங்களையும் சிலர் எழுப்பி இருந்தனர்.

இந்தநிலையில், இந்த வீடியோவின் உண்மை தன்மை குறித்து பிபிசி நிறுவனம் ஆய்வு நடத்தியதில் முக்கிய தகவல்கள் தெரிய வந்துள்ளது.

இந்த வீடியோ  உண்மையானதாக இருந்தாலும், இதில் பகிரப்பட்டுள்ள தகவல் தவறானது என்பதை பிபிசி கண்டறிந்துள்ளது. பிரதமர் மோடியை அழகுப்படுத்துவது அவரது தனிப்பட்ட ஒப்பனை கலைஞர் அல்ல.

2016ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28ம் தேதி லண்டன் மேடம் தசவுட்ஸ் அருங்காட்சியகத்தில் மோடியின் வேக்ஸ் சிலை நிறுவப்பட்டது.

இந்த வீடியோ 2016-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் எடுக்கப்பட்டது. ‘மேடம் தசவுட்ஸ் வேக்ஸ்’ அருங்காட்சியகத்தை சேர்ந்த குழுவினர் தங்களின் அருங்காட்சியகத்தில் பிரதமர் மோடிக்கு மெழுகு சிலை அமைத்தனர்.

அந்த மாதிரி மெழுகு சிலை அமைப்பறத்காக அப்போது அளவெடுத்துள்ளனர். அவர்கள் டெல்லியில் மோடியின் வீட்டிற்கு வந்து அவரது சிகை அலங்காரம் உள்ளிட்டவற்றை அளவெடுத்துள்ளனர். அப்போது இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ ‘மேடம் தசவுட்ஸ் வேக்ஸ்’ யுடியூப் பக்கத்தில் இருப்பதை பிபிசி உறுதி செய்துள்ளது.

அருங்காட்சியத்தை சேர்ந்தவர்கள் அளவெடுப்பதற்காக எடுத்த வீடியோவுடன் இணைந்து தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் பெற்ற தகவலில் மாதந்தோறும் பிரதமர் மோடி 80 லட்சம் ரூபாய் செலவு செய்வதாக தவறாக சமூகவலைதளங்களில் பதிவிடப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது.

பிரதமரின் மோடியின் ஒப்பனை அல்லது ஆடைகள் செலவு பற்றிய எந்தவொரு கேள்வியும் தகவல் அறியும் சட்டத்தில் கேட்கப்படவில்லை என்பதை பிரதமர் அலுவலகம் தெரிவிக்கிறது.

2018ம் ஆண்டு ஊடக தகவல்களின்படி, 1988ம் ஆண்டு தொடங்கி இந்திய பிரதமர்கள் அணிந்த ஆடைகளுக்கான செலவுகள் பற்றி தகவல் அறியும் உரிமை சட்ட செயற்பாட்டாளர் ரோகித் சப்கார்வால் கேள்வி கேட்டுள்ளார்.

இதில் அடல் பிஹாரி வாஜ்பேயி, மன்மோகன் சிங் ஆகியோரின் ஆடைகளுக்கான செலவுகளும் உள்ளடங்குகின்றன. பிரதமர் தனிப்பட்ட முறையில் செய்கிற செலவுகள் அரசு நிதியில் இருந்து செலவிடப்படுவதில்லை என்றும் பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளதாக பிபிசி தமிழ் தெரிவித்துள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close