[X] Close

வெயிலைத் தவிர்க்க பிரச்சாரத்தில் 'டூப்ளிகேட்' கவுதம் கம்பீர்: ஆம் ஆத்மி வெளியிட்ட புகைப்படத்தால் சர்ச்சை


  • kamadenu
  • Posted: 11 May, 2019 17:22 pm
  • அ+ அ-

 

முன்னாள் கிரிக்கெட் வீரரும் கிழக்கு டெல்லி பாஜக வேட்பாளருமான கவுதம் கம்பீர், வெயிலைத் தவிர்க்க பிரச்சாரத்தில் தன்னைப் போன்ற டூப்ளிகேட்டைப் பயன்படுத்துவதாக, புகைப்படத்துடன் ஆம் ஆத்மி குற்றம் சாட்டியுள்ளது.

 

இதுகுறித்து ஆம் ஆத்மி மூத்த தலைவரும் டெல்லி துணை முதல்வருமான மணிஷ் சிசோடியா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் வெயிலில் இருந்து தப்பிப்பதற்காக கவுதம் கம்பீர் தன்னைப் போன்ற தோற்றம் கொண்ட ஒருவரை டூப்ளிகேட்டாகப் பயன்படுத்துவதாகத் தெரிவித்துள்ளார்.

 

இதுதொடர்பாக அப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:

 

''இது காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு இடையேயான மெகா கூட்டணியாகும். சூரிய வெளிச்சத்தின்போது நிற்பதில் கவுதம் கம்பீருக்குப் பிரச்சினை இருப்பதால், அவர் ஏசி காரில் உள்ளே அமர்ந்திருக்கிறார். அவருக்குப் பதிலாக அவரின் தோற்றத்தில் இருக்கும் ஒருவர் காரின் மேலே நின்று பிரச்சாரம் செய்கிறார். தொப்பி அணிந்திருக்கும் அவருக்கு கட்சித் தொண்டர்கள் மாலை அணிவிக்கின்றனர். இந்தப் போலியான நபர், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ஆம் ஆத்மியின் குற்றச்சாட்டுக்கு கவுதம் கம்பீர் இதுவரை பதிலளிக்கவில்லை.டெல்லியின் 7 மக்களவைத் தொகுதிகளில் நாளை (மே 12) வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இங்கு பாஜக - காங்கிரஸ் - ஆம் ஆத்மி என மும்முனைப் போட்டி நிலவுவது குறிப்பிடத்தக்கது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close