[X] Close

ரூ.6 கோடி கொடுத்து சீட் வாங்கினேனா?- மகனின் குற்றச்சாட்டை மறுக்கும் மேற்கு டெல்லி ஆம் ஆத்மி வேட்பாளர்


6

  • kamadenu
  • Posted: 11 May, 2019 17:06 pm
  • அ+ அ-

-ஏஎன்ஐ

மேற்கு டெல்லி தொகுதியின் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் பல்பீர் சிங் தன் மீது தனது மகன் முன்வைத்த பரபரப்பு குற்றச்சாட்டை நிராகரித்துள்ளார்.

முன்னதாக, பல்பீர் சிங்கின் மகன் உதய் ஜக்கார் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், "எனது தந்தை அரசியலுக்கு வந்தே மூன்று மாதம்தான் ஆகிறது. அதற்கு முன்னதாகவே அவர் அன்னா ஹசாரே இயக்கத்தில் இருந்தார், ஆம் ஆத்மியில் இருந்தார் என்றெல்லாம் கூறப்படுவது பொய். அதற்கான எந்த சாட்சியுமே இல்லை.

ஆனால், ஆம் ஆத்மி கட்சியிலிருந்து மேற்கு டெல்லியில் போட்டியிடுவதற்காக எனது தந்தை கேஜ்ரிவால், கோபால் ராய் ஆகியோரை சந்தித்தார். கேஜ்ரிவாலிடம் நேரடியாக ரூ.6 கோடி கொடுத்து இந்த சீட்டை அவர் வாங்கியுள்ளார். ஒரு முதிர்ச்சியற்ற அரசியல்வாதிக்கு அரசியலில் சேர்ந்த மூன்றா மாதங்களில் எம்.பி. தேர்தலில் போட்டியிட சீட் வழங்கப்பட்டுள்ளது.

கேஜ்ரிவாலிடம் என் தந்தை நேரடியாக பணமளித்ததற்கான நம்பத்தகுந்த ஆதாரம் என்னிடம் உள்ளது" எனக் கூறியிருந்தார்.

இதனை திட்டவட்டமாக மறுத்துள்ள மேற்கு டெல்லி ஆம் ஆத்மி வேட்பாளர் பல்பீர் சிங், "எனது மகனின் இந்த குற்றச்சாட்டை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். நான் என் மகனுடன் அரசியல் குறித்து எதுவுமே பேசியதில்லை.

என் மகன் அவரது தாத்தா - பாட்டி வீட்டிந்தான் வளர்கிறார். பிறந்தநாள் முதலே அவரது அன்னை வழி தாத்தா - பாட்டி வீட்டில்தான் வசிக்கிறார். என் மனைவி என்னுடன் 6,7 மாதங்கள்தான் வாழ்ந்தார். அவரை நான் கடந்த 2009-ல் விவாகரத்து செய்தேன். என் மகனுடன் நான் எப்போதாவதுதான் பேசுவேன். அப்படியிருக்க நான் எப்படி அரசியல் பற்றி அவரிடம் பேசியிருக்க முடியும்" என்று கூறியுள்ளார்.

மக்களவைத் தேர்தலில் டெல்லி யூனியன் பிரதேசத்தில் மொத்தமுள்ள 7 தொகுதிகளுக்கு பாஜக - காங்கிரஸ் - ஆம் ஆத்மி என மும்முனைப் போட்டி நிலவுகிறது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) 12-ம் தேதி அங்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இந்நிலையில், மேற்கு டெல்லி ஆம் ஆத்மி வேட்பாளரின் மகன் கூறிய குற்றச்சாட்டு பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close