[X] Close

ராஜஸ்தானில் தலித் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை; குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்க மாயாவதி வலியுறுத்தல்


  • kamadenu
  • Posted: 11 May, 2019 16:39 pm
  • அ+ அ-

-Janarthanaperumal S_50242

ராஜஸ்தானில் கணவர் கண்முன்னே தலித் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த நபரை மரண தண்டனை வழங்க வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி ஆவேசத்துடன் கூறியுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் அல்வார் பகுதியில் ஏப்ரல் மாதம் 26-ம் தேதி தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, அவர்களை ஒரு கும்பல் இரண்டு பைக்குகளில் விரட்டி வந்துள்ளது. அவர்களை வழிமறித்த மறைவிடத்துக்கு தூக்கிச் சென்ற கும்பல் கணவரை தாக்கியது.

அந்த கும்பல் ஒன்று அவரது கண்முன்னே அவரது மனைவியை கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளது.  சம்பவம் குறித்து புகார் அளித்தும் கண்டுகொள்ளாத காவல்துறை, 7-ம் தேதி வழக்கு பதிவு செய்து, 6 பேரை கைது செய்தது.

இதுகுறித்து பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கூறியுள்ளதாவது:

மக்களவை தேர்தலில் பெண்களை தரக்குறைவாக விமர்சிக்கும் போக்கு தொடர்கிறது. தங்கள் அரசியல் லாபத்துக்காக தேர்தலில் போட்டியிடும் பெண்களை பற்றி தரக்குறைவாக விமர்சிப்பதை ஏற்க முடியாது. அவர்கள் மீது தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராஜஸ்தானில் தலித் சமூக பெண்ணை கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்த கும்பலுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களின் புகாரை அலட்சியப்படுத்திய காவல்துறை மற்றும் ஆளும் காங்கிரஸ் அரசு மீதும் உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முக்கிய குற்றவாளிக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் தலித் என்பதால் இதனை நான் கூறவில்லை. அவர் ஒரு பெண் என்பதால் இதனை கூறுகிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close