[X] Close

6-ம் கட்டத் தேர்தல்: ஓரிடத்தில் கூட பாஜக, காங்கிரஸ் வெற்றி பெறாது: அகிலேஷ் உறுதி


6

  • kamadenu
  • Posted: 11 May, 2019 15:50 pm
  • அ+ அ-

-Janarthanaperumal S_50242

6-ம் கட்டத் மக்களவைத் தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் ஒரு இடத்தில் கூட பாஜக, காங்கிரஸ் வெற்றிபெறாது என சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.

மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி தொடர்ந்து 7 கட்டங்களாக நடைபெறுகிறது. ஏற்கெனவே 5 கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளன. 6-வது கட்டமாக 7 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளுக்கும் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இதில், பிஹார் (8 தொகுதிகள்), ஹிரியாணா (10), ஜார்க்கண்ட் (4), மத்திய பிரதேசம் (8), உத்தரபிரதேசம் (14), மேற்குவங்காளம் (8), டெல்லி (7) ஆகிய 7 மாநிலங்கள் 6-வது கட்ட தேர்தல் நடைபெறுகிறது.

இந்த மாநிலங்களில் கடந்த ஒரு மாதமாக தீவிர தேர்தல் பிரசாரம் நடைபெற்று வந்தது. தேர்தைலையொட்டி, பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர்.

உத்தர பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், மத்திய அமைச்சர்  மேனகா காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங், கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் உள்ளிட்டோர் இந்த தேர்தலில் போட்டியிடும் முக்கிய  வேட்பாளர்கள் ஆவர்.

இந்த நிலையில் 6-ம் கட்டத் தேர்தல் தொடர்பாக சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியதாவது:

பாஜக, ஜாதி அரசியல் செய்து வருகிறது. இவர்கள் தொடர்ந்து ஆட்சியில் இருக்க  வேண்டும் என்பதற்காக வெவ்வேறு ஜாதி, மதத்தவர்களிடம் வெறுப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். பாஜக பொய்களையும், வெறுப்புணர்வையும் முன்வைத்தே இயங்குகிறது. இவர்கள் மக்களை ஏமாற்றி கொண்டிருக்கிறார்கள்.

சமாஜ்வாதி கட்சியி வேட்பாளர்களை போட்டியில் இருந்து விலக வேண்டும் என அதிகாரிகள்  மூலமாக மறைமுகமாக மிரட்டுகின்றனர். இவர்களுக்கு மக்கள் தேர்தலில் தக்க பாடம் புகட்டுவார்கள். பாஜக, தாங்கள் தான் குற்றமற்றவர்கள் என்றும் மற்றவர்கள் போலியானவர்கள் என்றும் கூறி மக்களை அச்சுறுத்தும் முயற்சியில் உள்ளது.

நாளை நடைபெறும் 6-ம் கட்ட தேர்தலில் பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாது. 7ம் கட்ட தேர்தலில் பாஜக ஒரு தொகுதியில் தான் வெற்றி பெறும் இவ்வாறு அவர் கூறினார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close