[X] Close

டெல்லியில் கிலோ கணக்கில் போதை மருந்து கைப்பற்றப்பட்டதால் பரபரப்பு; 3 பேர் கைது


3

  • kamadenu
  • Posted: 11 May, 2019 14:09 pm
  • அ+ அ-

டெல்லியில்  கிலோ கணக்கில் போதை மருந்து கைப்பற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

டெல்லியில் சட்டவிரோதமான முறையில், ரகசியமாக போதைப்பொருள் தயாரிப்பு மையம் இயங்கி வந்தது. டெல்லி பிரிவு போதைப்பொருள் தடுப்புக் கழகத்தினர் நடத்திய சோதனையில் இது தெரியவந்தது. இந்நிலையில் அந்த மையத்தைப் பூட்டி அதிகாரிகள் சீல் வைத்தனர். அங்கிருந்த போதை மருந்துகளையும் கைப்பற்றினர்.

இதுகுறித்து வெளியான தகவலில், சுமார் 1,800 கிலோ சூடோஃபெட்ரின் (pseudoephedrine) மற்றும் 2 கிலோ கொகெய்ன் கைப்பற்றப்பட்டுள்ளது. அங்கு பணியாற்றி வந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

டெல்லியில் ஆறாவது கட்டமாக நாளை (மே 12) 7 மக்களவைத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறும் சூழலில், போதை மருந்துகள் கைப்பற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வாக்களிக்கலாம் வாங்க

'மிஸ்டர் லோக்கல்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close