[X] Close

பிரதமர் மோடியை சர்ச்சைக்குரிய வகையில் விமர்சித்த சித்து: தேர்தல் ஆணையம் நோட்டீஸ்


  • kamadenu
  • Posted: 11 May, 2019 13:26 pm
  • அ+ அ-

-ஏஎன்ஐ

பிரதமர் நரேந்திர மோடியை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பஞ்சாப் அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்து சர்ச்சைக்குரிய விதத்தில் விமர்சித்துள்ளார்.

அவரது விமர்சனத்துக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன. மேலும், தேர்தல் ஆணையம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சித்து பேசியதாவது:

பிரதமர் மோடி அவர்கள் புதுமணப்பெண் போன்றவர். புதுப் பெண்ணின் கைவளைதான் அதிக சத்தம் எழுப்பும் அவர் அதிகமாக சப்பாத்தி செய்ய மாட்டார். அக்கம்பக்க வீட்டார் அவரும் வேலை செய்கிறார் என்று நம்ப வேண்டும் என்பதற்காக வெறும் வளையோசை மட்டுமே எழுப்புவார். அதுபோலத்தான் மோடி ஆட்சியும் நடக்கிறது. வெறும் வாக்குறுதிகள் மட்டும்தான் உள்ளனவே தவிர செயல்பாடு ஏதுமில்லை.

மக்கள் நலனை உறுதி செய்யும் ஆட்சி நடத்துவதற்காகவே தேர்தல் நடைபெறுகிறது. பாஜக தேசத்தை கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறது.

இதுவரை 6 செய்தியாளர்களில் சந்திப்பில் பிரதமர் மோடிக்கு எதிராக நான் அறிக்கை வெளியிட்டுள்ளேன். எனது ஒரு குற்றச்சாட்டுக்குக் கூட அவர் இதுவரை பதிலளிக்கவில்லை.

அதுமட்டுமா, பெண்கள் பாதுகாப்பு, கல்வி, பசி குறியீடு, விவசாயிகள் பேரணி மேற்கொண்டது என எந்தப் பிரச்சினை குறித்தும் மோடி பேச விரும்புவதில்லை.

இவ்வாறு சித்து பேசியுள்ளார்.

அவரது இந்தப் பேச்சைக் கண்டித்து தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஏற்கெனவே கடந்த மாதம் "பிஹார் முஸ்லிம்கள் வாக்குகளைப் பிரிக்க வேண்டாம்" என சித்து பேசியதைக் கண்டித்து அவர் 72 மணி பிரச்சாரம் செய்ய தடை வித்தித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close