[X] Close

''வளர்ச்சி என்றுகூறி ஆட்சிக்கு வந்து இப்போது பிரித்தாள்வதில் தீவிரம் காட்டுகிறார்''- மோடி படத்தை அட்டையில் வெளியிட்டு அமெரிக்காவின் டைம் இதழ் விமர்சனம்


  • kamadenu
  • Posted: 11 May, 2019 12:59 pm
  • அ+ அ-

நாடு இறுதிகட்ட தேர்தலை நெருங்கிக்கொண்டிருக்கும் நேரத்தில் டைம் இதழ் சர்வதேச பதிப்பில் அட்டையில் பிரதமர் மோடியின் படத்தை வெளியிட்டு சர்ச்சைக்குரிய தலைப்பையும் உடன் வெளியிட்டுள்ளது. ''மோடி ஒரு சீர்திருத்தவாதி'' என்று இன்னொரு தனிக்கட்டுரையும் இடம்பெற்றுள்ளது.

அமெரிக்காவின் பிரபல பத்திரிகையான டைம், நேற்று வெளியான தனது மே20, 2019 இதழில் ''இந்தியாவின் பிரித்தாளும் தலைவர்'' என்ற கட்டுரையை வெளியிட்டுள்ளது. இந்த இதழ் அட்டையில் 68 வயதான மோடியின் உருவப்படம் ஓவியமாகத் தீட்டப்பட்டு சிறப்பிக்கப்பட்டுள்ளது.

டைம் இதழின் ஐரோப்பா, மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் தென் பசிபிக் நாடுகள் ஆகியவற்றை உள்ளடக்கிய சர்வதேச பதிப்பில் இக்கட்டுரைகள் வெளியிடப்பட்டுள்ளன.  அமெரிக்க பதிப்பில் மட்டும் வெள்ளை மாளிகையில் தற்போது இயங்கிவரும் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த எலிசபெத் வாரன் பற்றிய அட்டைப் படக் கட்டுரை இடம் பெற்றுள்ளது.

''இந்தியாவை பிரித்தாளும் தலைவர்'' கட்டுரையை எழுதியவர் ஆதீஷ் டாசீர், இவர் இந்திய பத்திரிகையாளர் தல்வீண் சிங் மற்றும் காலஞ்சென்ற பாகிஸ்தானிய அரசியல்வாதியும் தொழிலதிபருமான சல்மான் டாசீரின் மகனுமாவார்.

இதே கட்டுரையில் எதிர்க்கட்சியான காங்கிரஸின் செயல்பாடுகளும்  விமர்சிக்கப்பட்டுள்ளது. அதில் ராகுலின் தங்கை பிரியங்காவை முன்னிறுத்தி வாரிசு அரசியல் செய்வதைத் தவிர அதற்கு வேறு வழி தெரியவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்னொரு தனி கட்டுரையான ''மோடி ஓர் சீர்திருத்தவாதி''யை எழுதியவர் இவான் பிரெம்மர், இவர் உலகளாவிய அரசியல் இடர் ஆராய்ச்சி மற்றும் ஆலோசனை நிறுவனமான யூரேசியா குரூப்பின் நிறுவனர்.

பத்திரிகையில் உள்ளே டாசீர் எழுதிய 'உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தில் மோடி அரசாங்கம் ஐந்து ஆண்டுகளுக்கு நீடித்திருக்க முடியுமா?' என்ற தலைப்பிலும் மற்றும் பிரெம்மர் எழுதிய, 'மோடி இந்தியாவின் சிறந்த பொருளாதார சீர்திருத்தத்திற்கான நம்பிக்கை', என்ற தலைப்பிலும் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.

டாசீரின் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ள சில முக்கிய கருத்துக்களாவன:

''2014ல் அவர் (மோடி) ஊழல் மற்றும் சுரண்டல்களில் தவிக்கும் மக்களின் மீட்பராக தன்னை முன்னிறுத்தி வளர்ச்சியை நோக்கி நாட்டை செலுத்தும் ஒரு நம்பிக்கையை உருவாக்கப் போவதாக பிரச்சாரத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். ஆனால் 2019ல் பிரச்சாரம் முற்றிலும் வேறுமாதிரி திசைதிரும்பியுள்ளது.

வளர்ச்சித் திட்டங்கள் மூலம் பொருளாதார வேறுபாடுகளை களையப் போவதாக ஆட்சிக்கு வந்தவர்கள் மத வேறுபாடுகளோடு வாழ்வதற்கான பிரச்சாரங்களை செய்து வருகிறார்கள்.

இந்து மத மறுமலர்ச்சியின் ஒரு பகுதியாக, வருங்காலத்தில் பிரகாசமான எதிர்காலத்தை அளிக்கப்போகும் ஒரு தூதுவராக அவர் இப்போது வலம் வரத் தொடங்கியுள்ளார். அதேவேளை, ஒரு அரசியல்வாதியாக மோடி ஏற்கெனவே சொன்ன வாக்குறுதிகளை காப்பாற்றத் தவறிவிட்டார். இதன்மூலம் மீண்டும் ஒரு தேர்தலில் போட்டியிடும் நம்பிக்கையை அவர் இழந்துவிட்டார்.

மோடியின் பொருளாதார அதிசயம் செயல்படுத்த முடியாமல் தோல்வியில் முடிந்தது மட்டுமில்லை, இந்தியாவில் நச்சுகலந்த ஒரு மதவாத தேசிய ஒரு மோசமான சூழ்நிலை உருவாகவும் அவர் உதவி புரிந்துள்ளார்.

காங்கிரஸின் இன்றைய நிலை

காங்கிரஸைப் பொறுத்தவரை அவர்களுக்கு வாரிசு அரசியலை முன்னிறுத்தப்படுவதைத் தவிர வேறு வழி தெரியவில்லை. பிரியங்கா காந்தி, ராகுலின் சகோதரி.

இவர் சகோதரரின் அரசியல் நிலைப்பாட்டில்தான் இணைய வேண்டும் என்ற நிலை. இது எப்படி இருக்கிறதென்றால் 2020ல் மீண்டும் அமெரிக்க ஜனநாயகக் கட்சிக்கு ஹிலாரி கிளிண்டன் தனது மகள் செல்சியா விக்டோரியாவை துணை ஜனாதிபதியாக களம் இறக்குவதற்கு இணையானதாகும்.

இவ்வாறு டாசீரின் கட்டுரையில் இடம்பெற்றுள்ளது.

மோடி ஓர் சீர்திருத்தவாதி

இதே இதழில் இடம்பெற்றுள்ள இன்னொரு முக்கியமான கட்டுரை ''மோடி ஓர் சீர்திருத்தவாதி''யில் இடம்பெற்ற முக்கிய கருத்துக்கள்:

இந்தியா இன்னும் மாற்றம் தேவை, மோடியை விட அதிகமான நபர்கள் இருக்கிறார்கள். ஆனால் மோடி ஒரு மிகச்சிறந்த சீர்திருத்தத்தை செய்துவிட்டார். சீனா, அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட உலக நாடுகள் பலவற்றோடும் நல்லதொரு வெளியுறவுக் கொள்கை ஏற்படுத்திக்கொண்டார். வளர்ச்சிக்காக ஏங்கும் கோடிக்கணக்கான மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வது உள்நாட்டு வளர்ச்சிக்கு ஜனநாயகபூர்வமாக உதவும். 

இவ்வாறு டைம் இதழ் மோடி பற்றிய கட்டுரைகளை வெளியிட்டுள்ளது.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close