[X] Close

முஸ்லிம் இளைஞரைக் காப்பாற்றிய சீக்கிய போலீஸ்: சமூகவலைதளங்களில் குவியும் பாராட்டு


sikh-police-officer-who-saved-muslim-man-from-mob-is-hero-on-social-media

  • பாரதி ஆனந்த்
  • Posted: 25 May, 2018 15:45 pm
  • அ+ அ-

உத்தரகாண்டில் ஆவேசமடைந்த காவி கும்பல் ஒன்றிடமிருந்து முஸ்லிம் இளைஞரைக் காப்பாறிய சீக்கிய போலீஸுக்கு சமூகவலைதளங்களில் பாராட்டு குவிந்து வருகிறது.

கடந்த செவ்வாய்க்கிழமை உத்தரகாண்டின் ராம்நகரில் உள்ள ஒரு கோயிலின் அருகே ஏதோ சண்டை நடப்பதாக போலீஸுக்கு தகவல் வந்தது. இதனையடுத்து காவல்துறை அங்கு விரைந்தது. அப்போது ஒரு இளைஞரை கும்பல் ஒன்று சரமாரியாகத் தாக்கிக் கொண்டிருந்தது.

விசாரணையில், அந்த இளைஞர் முஸ்லிம் என்றும் அவருடன் இருந்த தோழி இந்துப்பெண் என்றும். இதனாலேயே அந்த இளைஞரை அந்த கும்பல் தாக்கியது என்பதும் தெரியவந்தது.

உடனே தலையிட்ட ககன்தீப் சிங் என்ற அந்த காவலர், அந்த இளைஞரை வன்முறையில் ஈடுபட்டிருந்த கும்பலிடம் இருந்து மீட்டார். அப்படியும் அந்தக் கும்பல் அந்த இளைஞரை விடவில்லை. ககன்தீப் தனது மார்புடன் அந்தக் குழந்தையை அணைத்துக்கொண்டு காப்பாற்றினார். ஒவ்வொரு முறை யாராவது அந்த இளைஞரை அடிக்க முயன்றபோதும் தன்னையே அவர் கேடயமாகப் பயன்படுத்தி அந்த இளைஞரைக் காப்பாற்றினார். இது அப்பகுதியில் இருந்த யாரோ ஒருவரால் செல்ஃபோனில் பதிவு செய்யப்பட்டது. பின்னர் சமூகவலைதளங்களில் பரவிய அந்த வீடியோ தற்போது வைரலாகிவருகிறது.
இளைஞரைக் காப்பாறிய அந்த காவலரை அனைவரும் ஹீரோ என பாராட்டிப் புகழ்கின்றனர்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close