[X] Close
 

புவிவெப்பமயமாதலால் அரிசியின் ஊட்டச்சத்து குறையும்: ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்


global-warming-may-have-devastating-effects-on-rice

  • பாரதி
  • Posted: 25 May, 2018 13:00 pm
  • அ+ அ-

புவிவெப்பமயமாதலால் என்னென்ன தீங்கு ஏற்படும் என்ற பட்டியலில் தற்போது இணைந்திருக்கிறது அரிசி மீதான தாக்கம். ஆம், புவிவெப்பமயமாதலால் அரிசியில் உள்ள புரதம், வைட்டமின் போன்ற ஊட்டச்சத்துக்கள் குறைந்துவிடும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தாக்கம் தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் சற்று அதிகமாகவே இருக்கும் எனக் கூறப்படுகிறது. ஜார்னல் சயின்ஸ் அட்வான்ஸஸ் இதழின் அறிக்கையில் இத்தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ஆய்வறிக்கையை எழுதிய ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஆடம் ட்ரூனோவ்ஸ்கி, "புவிவெப்பமயமாதல், தட்பவெப்ப மாறுதல்கள், பசுமைக்குடில் வாயுக்கள் ஆகியன செடிகொடிகளின் சத்துக்களின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும்” எனக் கூறியிருக்கிறார்.

ஜப்பான், சீனா நாடுகளில் மேற்கொண்ட கள ஆய்வில் இந்தத் தகவல்கள் தெரியவந்திருக்கின்றன. 

இதற்காக பிரத்யேகமாக ஒரு நிலம் தேர்ந்தெடுக்கப்பட்டு அதில் 18 விதமான நெற்பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன. அந்தப் பயிர்களைச் சுற்றி 56 அடி அகலம் கொண்ட பிளாஸ்டிக் பைப்புகள் வைக்கப்பட்டன. அந்த பைப்புகளில் இருந்து கரியமில வாயு வெளியேறும்படி செய்யப்பட்டது.

ஆய்வின் முடிவில், இப்படிப்பட்ட சூழலில் வளர்க்கப்பட்ட அந்த நெற்பயிர்களில் இருந்து பெறப்பட்ட அரிசியில் இரும்புச் சத்து, ஜிங்க், புரதம், வைட்டமின் பி1, பி2, பி5, பி9 ஆகியன வெகுவாகக் குறைந்திருந்தது கண்டறியப்பட்டது.

குறிப்பாக வைட்டமின் பி1 17.1% ஆகவும், வைட்டமின் பி2 16.6% ஆகவும் குறைந்தது தெரியவந்தது.

நாம் வாழும் பூமி நமக்கு வளங்களைத் தரும்போது, நாம் அதைப் பேணாமல் நச்சுகளை விதைத்தால் பின்னாளில் நமக்கும் அதுதான் கிடைக்கும்.

தொடர்புடைய செய்திகள்

 
 




Kalathin Vasanai - Kindle Edition


d7

[X] Close