[X] Close

அலட்சியமாக ரயில்பாதையைக் கடந்த பயணி சாதுர்யமாக உயிர்காத்த ஒட்டுநர்


man-was-almost-run-over-by-metro-in-delhi-video-will-give-you-the-chills

  • பாரதி ஆனந்த்
  • Posted: 23 May, 2018 15:42 pm
  • அ+ அ-

டெல்லி சாஸ்திரி நகர் ரயில் நிலையத்தில் நேற்று மாலை ரயில்வே ட்ராக்கை கடக்க முயன்ற 21 வயது இளைஞர் ஒருவர் மயிரிழையில் உயிர்தப்பிய காட்சிதான் இப்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.

சில விநாடிகளில் ரயிலில் நசுங்கியிருக்க வேண்டியவர் மெட்ரோ ரயிலை இயக்கிய அந்த பைல்ட்டின் திறமையால் தப்பித்தார். வீடியோவைப் பார்த்து பகிர்ந்த ஒவ்வொருவரும் அந்த பைலட்டுக்கு வாழ்த்துகளை குவித்து வருகின்றனர். அதேவேளையில் உயிரின் மதிப்பு தெரியாமல் ரயில் பாதையைக் கடக்க முயன்ற அந்த இளைஞரையும் வசைபாடி வருகின்றனர்.

மயூர் பட்டேல் என்ற அந்த 21 வயது இளைஞருக்கு ரயில்வே போலீஸார் அபராதம் விதித்துள்ளனர்.
ரயில்வே இருப்புப் பாதைகளில் நடப்பது சட்டப்பட்டி குற்றமாகும். தடையை மீறி நடப்பவர்களுக்கு ரூ.500 அபராதமும் 6 மாதம் வரை சிறைத் தண்டனை வழங்கவும் சட்டத்தில் வழிவகை இருக்கிறது.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close