[X] Close

கிங் மேக்கர் டூ கிங்: யார் இந்த குமாரசாமி?


karnatakas-new-cm-kumaraswamy

  • பாரதி ஆனந்த்
  • Posted: 23 May, 2018 10:46 am
  • அ+ அ-

அரசியல் அமளிதுமளிகளுக்கு இடையே கர்நாடக மாநிலத்தின் 30-வது முதல்வராக பதவியேற்கவிருக்கிறார் ஹெ.டி.குமாரசாமி.

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் வெறும் 37 இடங்களை மட்டுமே கைப்பற்றிய மதச்சார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸின் நிபந்தனையற்ற ஆதரவுடம் ஆட்சி அமைக்கிறது. 78 தொகுதிகளைக் கைப்பற்றியிருந்தாலும் குமாரசாமிக்கு முதல்வர் பதவியை அளித்துள்ளது காங்கிரஸ். கர்நாடக அரசியல் களத்தைப் பொருத்தவரை மதச்சார்பற்ற ஜனதா தளம் எப்போதுமே கிங் மேக்கராகவே கருதப்பட்டிருக்கிறது. ஆனால், இந்த முறை அக்கட்சியின் நாயகரே கிங் ஆகியிருக்கிறார்.
முன்னாள் பிரதமரும் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவருமான எச்.டி.தேவகவுடாவின் மகன்தான் இந்த குமாரசாமி. பெங்களூரு பல்கலைக்கழகத்தில் அறிவியல் படிப்பில் பட்டம் வென்றார்.

தந்தை தீவிர அரசியலில் இருந்தபோது பெரிதாக அரசியலில் ஈடுபாடில்லாமல் இருந்தார் குமாரசாமி. அவரது கனவு சினிமாவாக இருந்தது. அரசியலுக்கு வருவதற்கு முன் அவர் அதையே செய்து கொண்டிருந்தார். சன்னாம்பிகா ஃபில்ம்ஸ் என்ற பேனரில் படங்களைத் தயாரித்துக் கொண்டிருந்தார்.

1996-ல் தான் முதன்முதலில் அரசியல் பிரவேசம் கண்டார். கனகபுரா மக்களவை தொகுதியில் போட்டியிட்டு வென்று அரசியலில் காலடி எடுத்துவைத்தார்.

அதே ஆண்டு தேவகவுடா பிரதமராக, கட்சியில் குமாரசாமியின் மதிப்பு பன்மடங்கு உயர்ந்தது.
2004-ல் ராமநகரம் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட்டு வென்ற அவர் தற்போது 2018 சட்டப்பேரவைத் தேர்தல் வரை தொடர்ந்து 4 முறை இத்தொகுதியில் வென்றுள்ளார்.

2006-ல் பாஜகவுடன் கூட்டணி சேர்ந்தபோது தந்தையின் அதிருப்திக்கு ஆளானார். பாஜகவுடன் கூட்டணி சேர்வது தங்கள் கட்சியின் மத்ச்சார்பற்ற கொள்கைக்கு களங்கம் விளைவிப்பதாகும் என தேவ கவுடா தெரிவித்தார். ஆனாலும் தந்தையின் எதிர்ப்பை மீறி குமாரசாமி பாஜகவுடன் கைகோர்த்தார்.

ஆனால், தற்போது காங்கிரஸின் நிபந்தனையற்ற ஆதரவுடன் முதல்வராக இருக்கும் நிலையில், "பாஜகவுடன் கூட்டு சேர்ந்து ஏற்படுத்திக் கொண்ட களங்கத்தைத் துடைப்பதே எனது லட்சியம்" என்று பேட்டியளித்தார்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close