[X] Close

திருப்பதி கோயிலில் மாயமான வைரம் ஜெனீவாவில் ஏலம் விடப்பட்டதா? சர்ச்சைகளும் சந்தேககங்களும்


a-pink-diamond-mystery-a-sacked-priest-politics

  • பாரதி ஆனந்த்
  • Posted: 22 May, 2018 16:27 pm
  • அ+ அ-

திருமலை திருப்பதி கோயிலில் மாயமான இளம் சிவப்பு நிற வைரம் ஒன்று அண்மையில் ஜெனீவாவில் ரூ.500 கோடிக்கு ஏலம் விடப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.

இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளவர் திருமலை திருப்பதி தேவஸ்தான தலைமை பூசாரி ராமன்னா தீக்‌ஷிதுலு என்பதால் சர்ச்சையை சிறப்பு கவனம் பெற்றுள்ளது.

ராமன்னா தீக்‌ஷிதுலு, அண்மையில்தான் திருமலை திருப்பதி தேவஸ்தான தலைமை பூசாரி பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். அதன் பின்னர், திருப்பதி ஏழுமலையான்
கழுத்தில் அணிவிக்கப்பட்டிருந்த பிளாட்டினம் நெக்லஸில் இருந்த இளம் சிவப்பு நிற வைரக்கல் ஒன்று மாயமாகிவிட்டதாகவும். அந்த வைரக்கல்தான் அண்மையில்
ஜெனீவா நாட்டில் ரூ.500 கோடிக்கு ஏலம் விடப்பட்டது என்றும் ஒரு பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை என அவர் வலியுறுத்துகிறார். மேலும், 1996-ம் ஆண்டு முதலாகவே இதுபோன்று நிறைய நகைகள் காணாமல் போய் வருவதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஆனால், தீக்‌ஷிதுலுவுக்கு மத்திய அமைச்சர்கள் பலருடன் நெருங்கிய தொடர்பு இருப்பதால் இந்த குற்றச்சாட்டுகள் அனைத்துமே அரசியல் சார்புடையது என்று கோயில் நிர்வாக தரப்பு கூறுகிறது. கர்நாடகத் தேர்தலுக்கு முன்னதாக பாஜக தலைவர் அமித் ஷாவை சந்தித்தாகவும் கோயில் நிர்வாகம் கூறுகிறது. 

சந்திரபாபு நாயுடு மீது குற்றச்சாட்டு..
ஆந்திர முதல்வர் சந்திரப்பாபு நாயுடு மீது ராமன்னா தீக்‌ஷிதுலு அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகம விதிகளை மீறி திருப்பதி கோயிலின் சமையலறையை தோண்டியதாகவும் சமையலறையில் உள்ள புதையலை எடுப்பதற்காகவே பராமரிப்பு பணிகள் என்ற பெயரில் சமையலறை மூடப்பட்டு புதையல் வேட்டை நடத்தப்பட்டதாகவும் அவர் கூறுகிறார்.
திருப்பதியில் மாயமாகும் நகைகள் குறித்த புகார்கள் சந்திரபாபு நாயுடு மூடி மறைப்பதாகவும் புகார் கூறுகிறார்.

ஆனால், கோயிலின் நிர்வாக அதிகாரி அனில் சிங்கால், இந்தக் குற்றச்சாட்டுகளை எல்லாம் மறுக்கிறார். 65 வயதானவுடன் பணி ஓய்வு அளிப்பது ஆந்திர அரசு வகுத்துள்ள சட்டத்திட்டத்தின்படியே மேற்கொள்ளப்பட்டது என்றும் இதில் எந்த அரசியலும் இல்லை என்றும் விளக்கமளித்துள்ளார். அரசியல் சார்புடனையே தீக்‌ஷிதுலு இத்தகைய குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close