[X] Close

விமானத்தில் ருசிகரம்: காதலை முன்மொழிய அறிவிப்பு மைக்கையும் பயன்படுத்தலாம்


indore-flight-proposal-incident

  • பால்நிலவன்
  • Posted: 22 May, 2018 13:14 pm
  • அ+ அ-

வானில் பறப்பதற்கு முன்பே காதல் வானில் பறப்பதற்கு வேண்டுமானால் விமான அதிகாரிகளின் அனுமதி தேவையில்லைதான். ஆனால் விமானத்திற்குள் இருக்கும் அறிவிப்பு மைக்கைப் பயன்படுத்தி காதலைச் சொல்ல நிச்சயம் அங்குள்ள அதிகாரிகளின் அனுமதி பெற்றே ஆக வேண்டும்.,

கடந்த மே 20 சனிக்கிழமையன்று இந்தூரிலிருந்து கோவாவுக்கு செல்லும் இண்டிகோ ஏர்லைன் விமானத்தின் பயணிகள் அமர்ந்துள்ள தளத்திற்குள் பயன்படுத்தப்படும் மைக்கை பயன்படுத்தி தன் பெண் தோழிக்கு இந்நபர் காதலை முன்மொழிந்துள்ளார். 

விமானத்திற்குள் காதலைத் தெரிவித்த இந்தச் சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோ காட்சியில் முதலில் அந்த நபர் தனது காதலை தோழியிடம் முன்மொழிகிறார். அறிவிப்பில் ஒலிபரப்பான காதலைக் கேட்டு பின்னர் அந்நபரின் அருகே தோழி நடந்து செல்கிறார். அப்போது எண்ணற்ற திரைப்படங்களில் வரும் காட்சியைப் போல அந்நபர், தனது காதலைத் தெரிவிக்கும் விதமாக முழந்தாளிட்டு ரோஜாப்பூவை அப்பெண்ணிடம் அளித்து தனது காதலைத் தெரிவிக்கிறார். 

விமான ஊழியர்கள் இவரின் காதலுக்கு ஆதரவாக, ''நீ என்னை திருமணம் செய்துகொள்வாயா?'' என்று எழுதப்பட்ட வாசகம் தாங்கிய அட்டையை கையில் வைத்துக் கொண்டிருக்கின்றனர்.  

எனினும் இந்த காதல் நாடகத்தால், பொது சிவில் விமானப் போக்குவரத்து வழங்கியுள்ள விதிமுறைகளில் கரும்புள்ளி விழுந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

அந்த நபர் தனது தோழியிடம் காதலை முதலில் முன்மொழிய இவ்விமானம் வழிவகுத்துள்ளது. அதன்பின்னர் விமான ஊழியர்களிடம் அனுமதி பெற்ற பிறகு, விமானத்திற்குள் அறிவிப்பு மைக்கை வேறு பயன்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து விமான நிலைய இயக்குநர் ஆரியமா சன்யால் தெரிவிக்கையில், அந்த விமானத்தில் பயணி ஒருவர் தனது தோழியிடம் முதலில் காதலை முன்மொழிந்துள்ளார், பின்னர் விமான ஊழியர்களிடம் அனுமதி கேட்ட பிறகு தான், விமானத்திற்குள் அறிவிப்பு மைக்கை பயன்படுத்தினார்.
இச்சம்பவம் விமானம் புறப்படுவதற்கு முன்பே நடந்த சம்பவம் என்பதால் இதை தவறாக எடுத்துக் கொள்ளக் கூடாது. விமானம் புறப்படுவதற்கு முன், விமானத்துக்குள் ஒருவர் காதலை முன்மொழிகிறார் எனில், அதற்கு விமான நிலைய அதிகாரிகளிடமிருந்து அனுமதி பெற வேண்டிய அவசியமில்லை. இருப்பினும், விமானத்தின் அறிவிப்பு மைக்கை பயன்படுத்துவதற்காக, உரிய விமானத் தலைவரிடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும் என்பதுதான் விதி" என்று அவர் கூறினார்.

சிவில் விமானப் போக்குவரத்து வேலைவாய்ப்பு, வெளியிட்டுள்ள 'விதிமுறைகள் 2010'-ல் ''பொது அறிவிப்பு முறை மற்றும் விமானத்த்துக்குள் மைக் அறிவிப்பு முறை ஆகியவை பாதுகாப்பு அறிவிப்புகளை தெரிவிப்பதற்கான கருவிகளே" என்று கூறப்பட்டுள்ளது.

இன்னொரு பக்கம், அந்நபர் காதலை சொல்வதற்கு பாதுகாப்பு மற்றும் அபாய அறிவிப்பு மைக்கைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் என்ன என்றும் யோசிக்க வேண்டியிருக்கிறது. காதலில் ஆபத்துகளும் உண்டு என்பதாலா? நல்லவேளையாக காதலை முன்மொழிந்ததே தவறு என்று விமான நிலைய அதிகாரிகள் சொல்லவில்லை. 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close