[X] Close
 

சிக்கன் சாப்பிட்டால் ஃபிட்டாக இருக்கலாம்: விளம்பர சர்ச்சையில் சிக்கிய சானியா


sania-mirza-asked-to-publicly-disassociate-from-misleading-poultry-advertisement

  • பாரதி
  • Posted: 22 May, 2018 11:26 am
  • அ+ அ-

இந்திய டென்னிஸ் நட்சத்திரமான சானியா மிர்சா கோழி இறைச்சிக்கான விளம்பரத்தில் நடித்ததன் வாயிலாக சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்.

Advertisement Standards Council of India எனப்படும் விளம்பரங்களுக்கான தரக்கட்டுப்பாடு நிறுவனத்துக்கு வந்த புகாரின் அடிப்படையில் சானியா மிர்சா சம்பந்தப்பட்ட கோழி இறைச்சி விளம்பரத்தில் இருந்து விலகிக் கொள்ளுமாறு அறிவுறத்தப்பட்டுள்ளது.

Centre for Science and Environment சிஎஸ்இ என்ற அமைப்பு இந்திய விளம்பர தரக் கட்டுப்பாடு கவுன்சிலுக்கு ஒரு புகார் மனுவை அனுப்பியது. அதில் சானியா மிர்சா தோன்றும் கோழி இறைச்சி விளம்பரம் ஒன்று உண்மைக்குப் புரம்பான தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

கோழி வளர்ப்புத் துறையில் ஆன்டிபயாடிக் மருந்துகள் தவறாக பயன்படுத்தப்படுவதைக் கண்டறிந்தது சிஎஸ்இ அமைப்பு. கடந்த 2014-ல் சிஎஸ்இ தாக்கல் செய்த ஆய்வறிக்கையில் கோழி இறைச்சியில் ஆன்டிபயாடிக் மருந்துக்கழிவுகள் இருப்பதாகத் தெரிவித்திருந்தது.

ஆனால், சானியா நடித்துள்ள கோழி இறைச்சி விளம்பரத்திலோ இந்த உண்மையை மறைக்கும் வகையில் விளம்பர வசனங்கள் இடம்பெற்றுள்ளன. எனவே, அந்த விளம்பரத்திலிருந்து சானியா விலகிக் கொள்ள வேண்டும் என சிஎஸ்இ தனது மனுவில் குறிப்பிட்டிருந்தது.

இதனை ஏற்றுக்கொண்ட இந்திய விளம்பர தரக்கட்டுப்பாட்டு கவுன்சில், சானியா மிர்சாவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மேலும் மே 23-ம் தேதிக்கு சம்பந்தப்பட்ட விளம்பரதாரர் விளம்பரத்தை மாற்றி அமைக்குமாறும் உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்




Kalathin Vasanai - Kindle Edition


m7

d7

[X] Close