[X] Close
 

அக் 2-ல் காந்தியன் மெனுவுடன் 'வெஜிடேரியன் டே' கொண்டாட்டம்: தயாராகும் ரயில்வே நிர்வாகம்


railways-plan-gandhian-menu-on-october-2

  • பாரதி
  • Posted: 21 May, 2018 09:54 am
  • அ+ அ-

தேசப்பிதா மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளை ஒட்டி அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் வரும் அக்டோபர் 2-ம் தேதியை 'வெஜிடேரியன் டே' எனக் கொண்டாட ரயில்வே நிர்வாகம் முடிவு செய்திருக்கிறது.

ஏற்கெனவே இத்தினத்தை தேசிய ஸ்வச்சத்தா திவஸ் என்று அனுசரிக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ள நிலையில், அன்றைய தினத்தை 'வெஜிடேரியன் டே' எனக் கொண்டாட அனுமதிக்குமாறு ரயில்வே கோரிக்கை வைத்துள்ளது.

காந்தியின் 150-வது பிறந்தநாளை ஒட்டி மத்திய அரசு பல்வேறு கொண்டாட்டங்களுக்குத் தயாராகி வருகிறது. இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான ரயில்வே நிர்வாகமும் பல்வேறு விதமான கொண்டாட்டங்களுக்கு ஆயத்தமாகி வருகிறது. அதன் ஒரு பகுதிதான் இந்த 'வெஜிடேரியன் டே'.

'வெஜிடேரியன் டே' ஸ்பெஷல் என்ன?
ரயில்வே நிர்வாகம் கடந்த மாதமே அனைத்து மண்டலங்களுக்கும் ஒரு சுற்றறிக்கையை அனுப்பியது. அந்த சுற்றறிக்கையில், 2018, 2019, 2020 ஆகிய மூன்று ஆண்டுகளிலும் அக்டோபர் 2-ம் தேதியை 'வெஜிடேரியன் டே' எனக் கொண்டாடவும். அன்றைய தினம், ரயில்வே ஊழியர்கள் அனைவரும் சைவ உணவையே உட்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள். இந்தியா முழுவதும் அனைத்து ரயில்களிலும் அன்று சைவ உணவு மட்டுமே வழங்கப்படும். ரயில் நிலைய வளாகங்களுக்குள்ளும் அசைவ உணவு விற்கப்படாது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, அனைத்து ரயில் நிலையங்களிலும் காந்தியின் ஓவியத்தைத் தீட்டவும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. காந்தியின் தேசப்பற்றையும் நாட்டுக்கு அவர் செய்த சேவையையும் பறைசாற்றும் வகையில் ரயில் நிலையங்களில் டிஜிட்டல் மியூசியம் வைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் மத்திய கலாச்சார அமைச்சகம் தயார் செய்துதரும் சிறப்பு காந்தி இலச்சினையை அனைத்து ரயில்களிலும் ரயில்வே முன்பதிவு சார்ட் ஒட்டும் இடத்தில் ஒட்டவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

 
 




Kalathin Vasanai - Kindle Edition


d7

[X] Close