[X] Close

ரயில்களில் பெண் பயணிகளின் பாதுகாப்புக்காக வருகிறது பேனிக் பட்டன்


railways-to-install-panic-button-in-trains-for-women-safety

  • kamadenu
  • Posted: 16 May, 2018 17:04 pm
  • அ+ அ-

ரயில்களில் செல்லும் பெண் பயணிகளின் பாதுகாப்புக்காக வடகிழக்கு ரயில்வே நிர்வாகம் பேனிக் பட்டன்களை அறிமுகப்படுத்துகிறது.

ரயில் பெட்டிகளில் பேனிக் பட்டன் அமைப்பதோடு இரவு நேர ரயில்களில் பெண் காவலர்களையும் பணியமர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு மீது ரயில்வே கவனம் செலுத்திவருகிறது. இந்நிலையில்தான் புறநகர் ரயில்களிலும் இரவு நேர ரயில்களிலும் பெண் காவலர்களை பணியமர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக வடகிழக்கு ரயில்வே போலீஸ் படையின் செய்தித் தொடர்பாளர் சஞ்சய் யாதவ் கூறியிருக்கிறார்.

பேனிக் பட்டன் குறித்து சஞ்சய் கூறும்போது, "பேனிக் பட்டன்கள் எலக்ட்ரிக் ஸ்விட்களின் மேலேயே பொருத்துப்படும். ஒருமுறை பேனிக் பட்டனை அழுத்தினால் அது கார்ட் கோச்சுக்கு எச்சரிக்கை ஒலியை எழுப்பும். எந்தப் பெட்டியில் இருந்து பேனிக் பட்டன் அழுத்தப்பட்டது என்பதையும் உணர்த்தும்.

தற்போது பெண்கள் ரயில் பயணத்தின்போது ஏதாவது தொந்தரவு ஏற்பட்டால் ஹெல்ப்லைன் எண்களையோ அல்லது எஸ்எம்எஸ் பயன்படுத்துவதையோ தான் நாட வேண்டியிருக்கிறது. இவற்றைத் தவிர அபாயச் சங்கிலியை இழுக்கமுடியும். ஆனால், பேனிக் பட்டன் பயன்பாடு இவற்றைவிட எளிதானது. உடனடியாக ஆபத்தில் இருப்பதைத் தெரிவிக்க வழி செய்கிறது" என்றார்.

இதுதவிர பெண் பயணிகளுக்கான சிறப்புப் பெட்டிக்கு வித்தியாசமான வண்ணப்பூச்சு. பெண் பயணிகளின் பெட்டியில் உள்ள ஜன்னல்களை கம்பி வலை அடித்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் ரயில்வே திட்டமிட்டிருக்கிறது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close