[X] Close

கர்நாடகா தேர்தல் வெற்றியும் நெட்டிசன்கள் ரியாக்‌ஷனும்


karanataka-results-and-netizens-reax

  • பாரதி ஆனந்த்
  • Posted: 15 May, 2018 12:24 pm
  • அ+ அ-

கர்நாடகாவில் ஆட்சியை அமைக்கப்போவது பாஜக என்பது உறுதியாகிவிட்டது. இந்நிலையில், சமூக வலைதளங்களில் பாஜக வெற்றி குறித்து தமிழக மக்கள் பலரும் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
அவற்றின் தொகுப்பு:

சரண்யா மகிழ்மதி: எல்லாரும் கர்நாடகத்துக்கு பாவபடுறாங்க.... தமிழ்நாடு என்னவோ.... சரி விடு...

செல்லப்பா நம்பி: பாஜகவின் தோல்விக்காக இந்தப் பாழாய்ப்போன மனம் ஏன் இப்படி ஏங்க வேண்டும்?

பனிமலர் பன்னீர்செல்வம்: இனி கோவா நிலைமைதான் பெங்களூருக்கும்.. ஊஊஊஊஊ

சோனியா அருண்குமார்: நாளைக்கே தமிழ்நாட்ல தேர்தல் வந்து அதுல தமிழிசை முன்னிலைன்னு செய்தி வந்தாலும் வரும்போல

மு.வி.நந்தினி: பாஜகவின் வெற்றி ஓட்டிங் மெஷின் தில்லுமுல்லுகளால் சாத்தியமானது என்பதை நான் நம்பவில்லை. மின்சாரம் செல்வதற்கு முன்பே ஆர்.எஸ். எஸ்., பாஜக கர்நாடக கிராமங்களுக்குள் புகுந்துவிட்டது. முப்பதாண்டுகால 'உழைப்பு' இந்த வெற்றியில் இருக்கிறது. ஒன்றிணைய வேண்டிய சக்திகள் பிரிந்திருப்பதும் பாஜகவின் வெற்றியை எளிதாக்கியிருக்கிறது. 

பார்வதி: காவிமயமானது கர்நாடகா

ரா.வினோத்: பாஜகவின் தொடர் வெற்றி நாட்டை ஒற்றை அதிகாரத்தை நோக்கி நகர்த்தி கொண்டிருக்கிறது. நாடு மிகவும் ஆபத்தான திசையை நோக்கி பயணிக்கிறது.

சரா சுப்ரமணியம்: சூப்பர் ஓவர் மாதிரி ஏதாவது ஏற்பாடு செய்யுமா தேர்தல் ஆணையம்?

அனுப்பிரியா: கர்நாடகாவில் பாஜக ஆட்சி அமைக்கலன்னாதான் ஆச்சர்யப்படணும்.

நெல்சன்: தண்ணீர் இருக்கும் இடத்தில் தாமரை மலரும்தானே !

சோனியா: ஓடுங்க அது நம்மள நோக்கி தான் வருது.

 

காவியில் இருப்பது எல்லாம் பாஜக ஆட்சியின் கீழ் உள்ள மாநிலங்கள்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close