[X] Close

யூ டூ கர்நாடகா?- காஷ்மீர் முன்னாள் முதல்வரின் ட்வீட்


et-tu-karnataka-asks-omar

  • பாரதி ஆனந்த்
  • Posted: 15 May, 2018 11:27 am
  • அ+ அ-

காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா தனது ட்விட்டரில் "Et tu, Karnataka?" யூ டூ கர்நாடகா - நீயுமா கர்நாடகா என ட்வீட் செய்திருக்கிறார்.

கர்நாடக சட்டப்பேரவைக்கு கடந்த 12-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. 224 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 222 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் 72% வாக்குகள் பதிவான நிலையில், பாஜக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கிறது.

இந்நிலையில், காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா, "காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா தனது ட்விட்டரில் "Et tu, Karnataka?" யூ டூ கர்நாடகா - நீயுமா கர்நாடகா" என ட்வீட் செய்திருக்கிறார். 
கர்நாடகாவில் பாஜக ஆட்சி அமைவது உறுதியான நிலையில் ஒமர் இந்தக் கேள்வியை எழுப்பியிருக்கிறார். 
ஜூலியஸ் சீசர் கதையில், "யூ டூ ப்ரூட்டஸ்?" எனக் கேட்டுவிட்டு சீசர் அவரது எதிரிகளின் தாக்குதலை தடுக்காமல் இறந்து போனார் என்பது எல்லோரும் அறிந்த கதை. துரோகத்தை சுட்டிக் காட்டும்போதெல்லாம் "யூ டூ ப்ரூட்டஸ்?" எனக் கேட்பது வழக்கத்தில் இருக்கிறது.

அந்த வகையில், கர்நாடகா மக்கள் துரோகம் இழைத்துவிட்டார்கள் என்பதைச் சொல்லாமல் சொல்லும் வகையில் ஒமர் அப்துல்லா,  தனது ட்விட்டரில் "Et tu, Karnataka?" யூ டூ கர்நாடகா - நீயுமா கர்நாடகா என ட்வீட் செய்திருக்கிறார்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close