[X] Close

எனது நண்பர் எடியூரப்பா முதல்வராவதை எதிர்நோக்கியிருக்கிறேன்: சுப்பிரமணியம் சுவாமி


i-hope-to-see-my-good-friend-yeddiruppa-as-cm-on-18-th

  • பாரதி ஆனந்த்
  • Posted: 15 May, 2018 10:52 am
  • அ+ அ-

எனது நண்பர் எடியூரப்பா வரும் 18-ம் தேதி கர்நாடகா முதல்வராவதை எதிர்நோக்கியிருக்கிறேன் என பாஜக மூத்த தலைவர்களுள் ஒருவரான சுப்பிரமணியம் சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருக்கிறார்.

கர்நாடக சட்டப்பேரவைக்கு கடந்த 12-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. 224 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 222 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் 72% வாக்குகள் பதிவான நிலையில், இன்று (மே 15) காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கிய சில மணித்துளிகளிலேயே சுப்பிரமணியம் சுவாமி, "கர்நாடகாவில் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்கும் என்பதற்கான அறிகுறி தெரிகிறது" என ட்வீட் செய்தார்.

அடுத்த சில நிமிடங்களில், "எனது நண்பர் எடியூரப்பா வரும் 18-ம் தேதி கர்நாடகா முதல்வராவதை எதிர்நோக்கியிருக்கிறேன்" என ட்வீட் செய்தார். "லிங்காயத் சமூகத்தினரை பிரித்தாள சித்து முயன்றபோதே நான் ஊடகங்களிடம் காங்கிரஸ் தற்கொலை செய்து கொள்கிறது" எனக் கூறியிருந்தேன் என மூன்றாவதாக ஒரு முக்கியத்துவம் வாய்ந்த ட்வீட் செய்தார்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close