[X] Close

லாலு வீட்டு திருமணத்தில் சாப்பாட்டுக்கு அடிதடி சண்டை: உள்ளே புகுந்து திருடிய தொண்டர்கள்


tej-pratap-yadav-s-wedding-crowds-stole-food-crockery

  • நெல்லை ஜெனா
  • Posted: 13 May, 2018 15:37 pm
  • அ+ அ-

ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியின் தலைவரும் பிஹார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவின் மூத்த மகன் தேஜ் பிரதாபின்
திருமணம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

மணமகன் தேஜ் பிரதாப் சிங்கிற்கும், மணமகள் ஐஸ்வர்யா ராயுக்கும் நடந்த திருமணத்தில் அரசியல் பிரபலங்கள், கட்சி நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள், அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

திருமணம் முடிந்ததும் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மொத்தம் 7 ஆயிரம் பேருக்கு தடல்புடலாக வகை வகையாக விருந்து பறிமாறப்பட்டது. பல்வேறு  விதாமன உணவு வகைகள், குளிர்பானங்கள், இனிப்புகள் என அனைத்தும் வைக்கப்பட்டு இருந்தது. ஆனால் அனைவருக்கும் பறிமாறுவதற்கு போதுமான ஏற்பாடுகள் இல்லை.

7 ஆயிரம் பேரையும் ஒரே சமயத்தில் உட்கார வைத்து சாப்பாடு போட முடியாத நிலையில் வரிசையாக பந்தி நடந்தது. ஆனால் எண்ணிக்கை அதிகம் என்பதால் பந்தியின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே இருந்தது. நேரம் செல்ல செல்ல பசி தாங்காமல் பலரும் எரிச்சல் அடைந்தனர். அதேசமயம் ராஷ்ட்ரீய ஜனதாதள தொண்டர்களால் பொறுமை காக்க முடியவில்லை.

முக்கிய பிரமுகர்கள் பந்தியே முடியாத நிலையில், அடுத்த பந்தி தொடங்கும் முன்பாக சில நூறு தொண்டர்கள் விருந்து நடைபெற்ற மண்பத்திற்குள் நுழைந்தனர். ஆளுக்காளு உணவுப் பொருட்களை எடுத்து தின்றனர். சிலர் பாத்திரங்களை உருட்டியும், உணவு பொருட்களை அள்ளிக் கொண்டு ஓடினர். ூ

மேலும் உணவு பொருட்களை எடுத்துச் செல்வதில் ஒருவருக்கு ஒருவர் மோதிக் கொண்டனர். பின்னர் இது அடிதடி சண்டையாக முடிந்தது. ஏராளமானோர் உள்ளே புகுந்து துவம்சம் செய்ததால் பாதுகாவலர்களால் ஒன்றும் செய்ய இயலவில்லை. கட்டுப்பாடு இழந்து உணவு பொருட்களை அள்ளிச் சென்றதுடன், பொருட்களையும் வீணாக்கினர். அத்துடன் ஸ்பூன், தட்டு,  டம்பளர், பாத்திரங்கள், பிங்கான் கோப்பைகள், சமையல் சாதனப் பொருட்களையும் திருடிச் சென்றனர்

பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் செய்வதறியாமல் திகைத்தனர். ஒரே குழப்பம் நிலவியது. லாலுவும், அவரது வீட்டினரும் வந்து அமைதிபடுத்த முயன்றனர். ஆனாலும் விஷயம் சாப்பாடு என்பதால் அவர்களாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை. உணவு பொருட்கள் அள்ளிச் செல்லப்பட்ட பின்பே பரபரப்பு அடங்கியது. எனினும் சாப்பிட வந்த அரசியல் புள்ளிகள் மற்றும் பிரபலங்களுக்கு தான் சாப்பாடு இல்லை.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close