[X] Close

மோடியை எதிர்த்தால் கனிமொழிக்கு எதிராக வருமான வரி சோதனையா? - மம்தா பானர்ஜி கண்டனம்


  • kamadenu
  • Posted: 17 Apr, 2019 15:29 pm
  • அ+ அ-

பாஜகவையும், நரேந்திர மோடியையும் கடுமையான எதிர்க்கும் ஒரே காரணத்துக்காக வருமான வரித்துறையை ஏவி திமுக வேட்பாளர் கனிமொழியை மத்திய அரசு துன்புறுத்துவதாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார். எதிர்க்கட்சிகளை நசுக்கும் மோடி அரசுக்கு தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

திமுக வேட்பாளர் கனிமொழி தங்கியிருக்கும் தூத்துக்குடி இல்லம், அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். மாவட்ட ஆட்சியர் அளித்த புகாரின் பேரில் இந்த ரெய்டு நடத்தப்படுவதாக வருமான வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், மேற்குவங்க மாநிலத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டு பேசியதாவது:

பிரதமர் என்பவர் மக்களால் விரும்பத்தக்கவராக, அன்பு செலுத்துக்கூடியவராக இருக்க வேண்டும். ஆனால் நமது நாட்டின் துரதிருஷ்டசம் சுதந்திர இந்தியாவிலேயே வெறுக்கத்தக்க ஒரு மனிதர் தற்போது பிரதமர் பதவியில் உள்ளார். மத்திய அரசின் நிறுவனங்களை ஏவி தங்கள் அரசியல் எதிரிகளை பழி தீர்ப்பை அவர் தொடர்ச்சியாக செய்து வருகிறார்.

திமுக சார்பில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் கனிமொழியின் தொடர்புடைய இடங்களில் நேற்று வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். இதற்கு ஒரே காரணம், கனிமொழி, பாஜகவையும், பிரதமர் மோடியையும் தொடர்ச்சியாக எதிர்த்து வருபவர்கள். அவர்களது கொள்கைகளை விமர்சித்து வருபவர்.

இந்த ஒரு காரணத்துக்காகவே அவர் மீது அதிகாரத்தை மத்திய அரசு கட்டவிழுத்து விடுகிறது. இதற்கு தேர்தல் ஆணையும் துணை புரிகிறது. நாடுமுழுவதுமே பாஜகவை எதிர்ப்பவர்களுக்கு எதிராக அரசு இயந்திரம் அத்துமீறல்களில் ஈடுபடுகிறது. தேர்தலில் மக்கள் பாஜகவினருக்கு தக்க பாடம் புகட்டுவார்கள்.

இவ்வாறு மம்தா பானர்ஜி பேசினார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close